பொது செய்தி

தமிழ்நாடு

பயிர் காப்பீடு செய்ய அழைப்பு

Added : அக் 04, 2021
Share
Advertisement
தர்மபுரி: நல்லம்பள்ளி வட்டார வேளாண் உதவி இயக்குனர் இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கை: தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டாரத்தில் நடப்பாண்டில் காரீப் பருவத்தில் திருத்தி அமைக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதில், நல்லம்பள்ளி வட்டாரத்திலுள்ள குத்தகைதாரர் உள்பட அனைத்து விவசாயிகளும் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப அறிவிக்கை செய்த

தர்மபுரி: நல்லம்பள்ளி வட்டார வேளாண் உதவி இயக்குனர் இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கை: தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டாரத்தில் நடப்பாண்டில் காரீப் பருவத்தில் திருத்தி அமைக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதில், நல்லம்பள்ளி வட்டாரத்திலுள்ள குத்தகைதாரர் உள்பட அனைத்து விவசாயிகளும் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப அறிவிக்கை செய்த பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்யலாம். இதில் பயிர் காப்பீடு செய்ய முன்மொழிவு படிவம், விண்ணப்பபடிவம், பயிர் சாகுபடி அடங்கல் அறிக்கை, ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தகம் முதல்பக்க நகல் ஆகியவை சமர்ப்பிக்க வேண்டும். பயிர் காப்பீடு கட்டணங்களை அரசு பொது சேவை மையங்களிலும், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களிலும், அனைத்து தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கிளைகளிலும் செலுத்தலாம். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X