பொது செய்தி

தமிழ்நாடு

35,376 பேருக்கு கொரோனா தடுப்பூசி

Added : அக் 04, 2021
Share
Advertisement
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் நேற்று, 380 மையங்களில் நான்காவது கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி, கூடுதல் கலெக்டர் வைத்தியநாதன் உள்ளிட்டோர் மாவட்டத்தின், பல்வேறு பகுதிகளில் அமைத்த கொரோனா தடுப்பூசி முகாம்களை ஆய்வு செய்தனர். மாவட்டத்தில் நேற்றிரவு, 7:00 மணி வரை நடந்த கொரோனா தடுப்பூசி முகாமில், 18 ஆயிரத்து, 950 பேர் முதல்கட்ட தடுப்பூசியையும், 16

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் நேற்று, 380 மையங்களில் நான்காவது கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி, கூடுதல் கலெக்டர் வைத்தியநாதன் உள்ளிட்டோர் மாவட்டத்தின், பல்வேறு பகுதிகளில் அமைத்த கொரோனா தடுப்பூசி முகாம்களை ஆய்வு செய்தனர். மாவட்டத்தில் நேற்றிரவு, 7:00 மணி வரை நடந்த கொரோனா தடுப்பூசி முகாமில், 18 ஆயிரத்து, 950 பேர் முதல்கட்ட தடுப்பூசியையும், 16 ஆயிரத்து, 426 பேர் இரண்டாம் கட்ட தடுப்பூசியையும் செலுத்திக் கொண்டனர். மாவட்டத்தில் நேற்று நடந்த, நான்காம் கட்ட கொரோனா தடுப்பூசி முகாமில் மொத்தம், 35 ஆயிரத்து, 376 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.

* பாலக்கோடு டவுன் பஞ்.,ல் காலை முதலே, 18 வயது மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. முகாமை மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது வட்டார மருத்துவர் சிவகுரு, தாசில்தார் அசோக்குமார், டவுன் பஞ்., செயல் அலுவலர் டார்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.


* அரூர் அடுத்த கொக்கராப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், நேற்று கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடந்தது. இதனை கூடுதல் கலெக்டர் வைத்தியநாதன், ஆய்வு செய்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X