பொது செய்தி

தமிழ்நாடு

மாவட்ட அளவிலான எறிபந்து போட்டி

Added : அக் 04, 2021
Share
Advertisement
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்ட எறிபந்து கழகம் சார்பில், ஓசூரிலுள்ள தனியார் பள்ளியில், காந்தி ஜெயந்தியையொட்டி, மாவட்ட அளவிலான எரிபந்து போட்டி நடந்தது. இதில், தலா ஆறு ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் விளையாடின. மாவட்ட எறிபந்து கழக தலைவர் நாராயணன், செயலாளர் தவமணி ஆகியோர், போட்டிகளை துவக்கி வைத்தனர். ஆண்கள் பிரிவில் ஓசூர் சாரதா வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதலிடமும்,

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்ட எறிபந்து கழகம் சார்பில், ஓசூரிலுள்ள தனியார் பள்ளியில், காந்தி ஜெயந்தியையொட்டி, மாவட்ட அளவிலான எரிபந்து போட்டி நடந்தது. இதில், தலா ஆறு ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் விளையாடின. மாவட்ட எறிபந்து கழக தலைவர் நாராயணன், செயலாளர் தவமணி ஆகியோர், போட்டிகளை துவக்கி வைத்தனர். ஆண்கள் பிரிவில் ஓசூர் சாரதா வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதலிடமும், செயின்ட் அகஸ்டின் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இரண்டாமிடமும் பெற்றன. அதேபோல், பெண்கள் பிரிவில், செயின்ட் அகஸ்டின் மெட்ரிக் பள்ளி முதலிடமும், கிருஷ்ணகிரி பெண்கள் அணி இரண்டாமிடமும் பெற்றன. வெற்றி பெற்ற அணிகளுக்கு, பரிசு கோப்பைகள் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன. எரிபந்து கழக மாவட்ட துணைத்தலைவர் பாலாஜி, துணை செயலாளர் சாதிக்பாபு மற்றும் செந்தமிழ் செல்வம் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X