பொது செய்தி

தமிழ்நாடு

மாநில தற்காப்பு கலை போட்டி: கிருஷ்ணகிரி போலீசார் சாதனை

Added : அக் 04, 2021
Share
Advertisement
ஓசூர்: தூத்துக்குடி மாவட்டத்தில், 18வது மாநில அளவிலான வூசூ தற்காப்பு கலை போட்டி இரு நாட்கள் நடந்தது. கிருஷ்ணகிரி மாவட்டம் சார்பில், 11 போலீசார் பங்கேற்றனர். இதில், காவலர்கள் ரூபா, சங்கீதா, கணேசன் ஆகிய மூன்று பேர் தங்கப்பதக்கமும், அஷ்வின், பார்த்திபன், திவ்யா, விஜயலட்சுமி, தீபிகா ஆகியோர் வெள்ளிப்பதக்கமும், பிரபா, மதன்ராஜ் ஆகிய இருவர் வெண்கல பதக்கமும் பெற்றனர். தூத்துக்குடி

ஓசூர்: தூத்துக்குடி மாவட்டத்தில், 18வது மாநில அளவிலான வூசூ தற்காப்பு கலை போட்டி இரு நாட்கள் நடந்தது. கிருஷ்ணகிரி மாவட்டம் சார்பில், 11 போலீசார் பங்கேற்றனர். இதில், காவலர்கள் ரூபா, சங்கீதா, கணேசன் ஆகிய மூன்று பேர் தங்கப்பதக்கமும், அஷ்வின், பார்த்திபன், திவ்யா, விஜயலட்சுமி, தீபிகா ஆகியோர் வெள்ளிப்பதக்கமும், பிரபா, மதன்ராஜ் ஆகிய இருவர் வெண்கல பதக்கமும் பெற்றனர். தூத்துக்குடி எஸ்.பி., ஜெயக்குமார், வெற்றி பெற்ற காவலர்களை பாராட்டி பரிசுகளை வழங்கினார். போலீசாருக்கு பயிற்சியளித்த கிருஷ்ணகிரி மாவட்ட தலைமை பயிற்சியாளர் ஜெயக்குமார் மற்றும் இணை பயிற்சியாளர் நவீன், கிரிதரன் மற்றும் சர்வதேச வூசூ நடுவர் ஆரிப், தங்கபாண்டியன், வூசூ சங்க மாநில தலைவர் ஜான்சன் ஆகியோரும் வாழ்த்து தெரிவித்தனர். அடுத்த மாதம் நடக்கவுள்ள சர்வதேச அளவிலான போட்டியில், வெற்றி பெற்ற போலீசார் பங்கேற்க உள்ளனர் என தெரிவிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X