பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்: மாவட்ட கலெக்டர், எம்.எல்.ஏ., ஆய்வு

Added : அக் 04, 2021
Share
Advertisement
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த மாதம், 12, 19 மற்றும் 26ல் நடந்த மூன்று கட்ட சிறப்பு முகாமில், ஒரு லட்சத்து, 75 ஆயிரத்து, 856 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்நிலையில், மாவட்டத்தில் நேற்றைய நிலவரப்படி, 93 ஆயிரத்து, 530 தடுப்பூசிகள் இருப்பு இருந்த நிலையில், 80 ஆயிரத்து, 100 பேருக்கு தடுப்பூசி இலக்கு நிர்ணயம் செய்து, நான்காம் கட்ட சிறப்பு முகாம், 723 மையங்களில் நேற்று

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த மாதம், 12, 19 மற்றும் 26ல் நடந்த மூன்று கட்ட சிறப்பு முகாமில், ஒரு லட்சத்து, 75 ஆயிரத்து, 856 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்நிலையில், மாவட்டத்தில் நேற்றைய நிலவரப்படி, 93 ஆயிரத்து, 530 தடுப்பூசிகள் இருப்பு இருந்த நிலையில், 80 ஆயிரத்து, 100 பேருக்கு தடுப்பூசி இலக்கு நிர்ணயம் செய்து, நான்காம் கட்ட சிறப்பு முகாம், 723 மையங்களில் நேற்று நடந்தது. ஓசூர் அருகே உள்ள கொத்த கொண்டப்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, தளி அடுத்த பேலகொண்டப்பள்ளி துணை சுகாதார நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த தடுப்பூசி மையங்களை, மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி, ஓசூர், தி.மு.க.,-எம்.எல்.ஏ., பிரகாஷ் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தொடர்ந்து மாவட்ட கலெக்டர் பேசுகையில், ''மாவட்டத்தில் இதுவரை, 9 லட்சத்து, 33 ஆயிரத்து, 612 பேர் முதல் தவணையும், 2 லட்சத்து, 64 ஆயிரத்து, 220 பேர் இரண்டாம் தவணையும் என மொத்தம், 11 லட்சத்து, 97 ஆயிரத்து, 832 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர்,'' என்றார். ஆய்வின்போது, சுகாதார பணிகள் துணை இயக்குனர் கோவிந்தன், பி.டி.ஓ.,க்கள் விமல்ரவிகுமார், ராமச்சந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X