சாலை விரிவாக்கத்துக்கு பனை மரங்கள் அகற்றம்: அரசு உத்தரவு காற்றில் பறந்ததா?| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சாலை விரிவாக்கத்துக்கு பனை மரங்கள் அகற்றம்: அரசு உத்தரவு காற்றில் பறந்ததா?

Added : அக் 04, 2021
Share
ஓசூர்: ஓசூரில், அரசின் உத்தரவை மீறியும், மாவட்ட கலெக்டர் அனுமதி இல்லாமலும், சாலை விரிவாக்கத்துக்கு பனை மரங்கள் அகற்றப்பட்டுள்ளன.தமிழகத்தில் கடந்த ஆக., 14ல், வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதில், பனை மரங்களை பாதுகாக்க, தமிழக அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்தது. அதன்படி, வேலி கரைகள், சாலையோரங்களில் பனை மரங்களை வளர்க்க மீண்டும் நடவடிக்கை எடுக்கப்படும். அவற்றை

ஓசூர்: ஓசூரில், அரசின் உத்தரவை மீறியும், மாவட்ட கலெக்டர் அனுமதி இல்லாமலும், சாலை விரிவாக்கத்துக்கு பனை மரங்கள் அகற்றப்பட்டுள்ளன.


தமிழகத்தில் கடந்த ஆக., 14ல், வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதில், பனை மரங்களை பாதுகாக்க, தமிழக அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்தது. அதன்படி, வேலி கரைகள், சாலையோரங்களில் பனை மரங்களை வளர்க்க மீண்டும் நடவடிக்கை எடுக்கப்படும். அவற்றை பாதுகாக்கும் பணியை அரசு கவனமாக மேற்கொள்ளும். பனை மரங்களை வெட்ட தேவை ஏற்பட்டால், மாவட்ட கலெக்டர் அனுமதி கட்டாயமாக்கப்படும் என, வேளாண் துறை அமைச்சர் அறிவித்தார். ஆனால், ஓசூரிலிருந்து பாகலூர் செல்லும் சாலை விரிவாக்கத்துக்கு, புதிய மாநகராட்சி அலுவலகம் அருகே, சாலையோரம் இருந்த, 15க்கும் மேற்பட்ட பனை மரங்கள் வேறோடு அகற்றப்பட்டுள்ளன. பனை மரங்களை பாதுகாப்பதாக, சட்டசபையில் அரசு அறிவித்த நிலையில், இதுபோன்ற செயல் நடந்துள்ளது. மேலும், மாவட்ட கலெக்டரின் அனுமதியின்றி பனை மரங்களை வேரோடு நெடுஞ்சாலைத்துறை அகற்றியுள்ளது. ஆனால் அதிகாரிகள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. இது குறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டியிடம் கேட்டபோது, ''இது தொடர்பாக விசாரிக்கப்படும். எந்த அனுமதியும் வழங்கவில்லை. விபரங்களை பார்க்கிறேன். அது தேசிய நெடுஞ்சாலையாக இருக்கும். பனை மரங்களை அகற்றியிருந்தால், அரசாணை படி அபராதம் மற்றும் தண்டனை வழங்கப்படும்,'' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X