பொது செய்தி

தமிழ்நாடு

மாவட்டத்தில் பரவலாக மழை; சாலையில் தேங்கிய நீரால் அவதி

Added : அக் 04, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கடந்த மூன்று நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. கிருஷ்ணகிரியில், நேற்று காலையில் இருந்தே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. தொடர் மழையால் காவேரிப்பட்டணம் பன்னீர்செல்வம் தெருவில் இரண்டு அடி அளவுக்கு தண்ணீர் தேங்கியதால், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகினர். மேலும் தண்ணீர் தேங்குவதால், கொசு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கடந்த மூன்று நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. கிருஷ்ணகிரியில், நேற்று காலையில் இருந்தே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. தொடர் மழையால் காவேரிப்பட்டணம் பன்னீர்செல்வம் தெருவில் இரண்டு அடி அளவுக்கு தண்ணீர் தேங்கியதால், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகினர். மேலும் தண்ணீர் தேங்குவதால், கொசு உற்பத்தியாவதாகவும், தேங்கும் தண்ணீரை அகற்ற பேரூராட்சி நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று காலை, 7:00 மணி நிலவரப்படி, அதிகபட்டசமாக நெடுங்கல்லில், 34.20 மி.மீ., மழை பதிவாகி இருந்தது. அதேபோல், தேன்கனிக்கோட்டை, 25, ஓசூர், 21.6, கிருஷ்ணகிரி, 16.4, ஊத்தங்கரை, 14.4, ராயக்கோட்டை, 13, போச்சம்பள்ளி, 11, சூளகிரி, 9, பெனுகொண்டாபுரம், 8.2, பாரூர், 5.2, அஞ்செட்டி, 2, என மொத்தம், 160 மி.மீ., மழை பதிவாகி இருந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X