பொது செய்தி

தமிழ்நாடு

சிறுத்தை நடமாட்டம் தகவல்: வனத்துறையினர் மறுப்பு

Added : அக் 04, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே, சிறுத்தை நடமாடியதாக வந்த தகவல் உண்மை இல்லை என, வனத்துறையினர் மறுத்துள்ளனர்.கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் எதிரிலுள்ள கூசுமலையில் கடந்த சில நாட்களுக்கு முன், இரண்டு குட்டிகளுடன், சிறுத்தை ஒன்றை அப்பகுதி மக்கள் பார்த்து, வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். வன ஊழியர்கள் கூண்டு வைத்து சிறுத்தையை பிடிக்க முயற்சி

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே, சிறுத்தை நடமாடியதாக வந்த தகவல் உண்மை இல்லை என, வனத்துறையினர் மறுத்துள்ளனர்.


கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் எதிரிலுள்ள கூசுமலையில் கடந்த சில நாட்களுக்கு முன், இரண்டு குட்டிகளுடன், சிறுத்தை ஒன்றை அப்பகுதி மக்கள் பார்த்து, வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். வன ஊழியர்கள் கூண்டு வைத்து சிறுத்தையை பிடிக்க முயற்சி செய்தனர். நேற்று முன்தினம் இரவு, 'வாட்ஸ்ஆப்'பில் சிறுத்தை படத்துடன் தகவல் ஒன்று பரவியது. அதில், கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் பின்பக்கம் சிறுத்தை ஒன்று நடமாடியது. எனவே, பொதுமக்கள் யாரும் அவ்வழியாக செல்ல வேண்டாம். சிறுத்தை நடமாடியது கண்காணிப்பு கேமராவில் பதிவானதாக, அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது குறித்து, ஓசூர் வனக்கோட்ட வன உயிரின காப்பாளர் கார்த்திகேயினியிடம் கேட்டபோது, ''நேற்று முன்தினம் இரவு, கலெக்டர் அலுவலகம் பின்புறம் சிறுத்தை நடமாடியதாக எங்களுக்கு தகவல் வந்தது. நாங்கள் அங்கு சென்று பார்த்தபோது, நாய்கள் சென்றதற்கான கால்தடங்களே இருந்தன. யாரும் சிறுத்தையை நேரில் பார்த்ததாக எங்களுக்கு தெரிவிக்கவில்லை. கடந்த, 10 நாட்களாக சிறுத்தையை யாரும் பார்க்கவில்லை. ஆனாலும், நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். உண்மைக்கு புறம்பான தகவல்களை, 'வாட்ஸ்ஆப்'பில் வெளியிட்டு, பொதுமக்களை பீதியடைய செய்ய வேண்டாம்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X