அகிலேஷ் வீட்டு முன்பு போலீஸ் ஜீப் எரிப்பு; உ.பி.,யில் தேர்தல் அரசியல் சூடு கிளம்பியது

Updated : அக் 04, 2021 | Added : அக் 04, 2021 | கருத்துகள் (18)
Share
Advertisement
லக்னோ: உ.பி., மாநிலத்தில் நடந்த வன்முறையில் 9 விவசாயிகள் கொல்லப்பட்டது அரசியல் ரீதியாக அனல் பறக்கும் வகையில் சூடு பிடித்துள்ளது. அங்குள்ள காங்., சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்கட்சிகள் போராட்டக்களத்தில் குதித்துள்ளன. இன்று காலை முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் வீட்டின் அருகே போலீசாருக்கும், சமாஜ்வாதி கட்சி தொண்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் போலீஸ் ஜீப்புக்கு தீ

லக்னோ: உ.பி., மாநிலத்தில் நடந்த வன்முறையில் 9 விவசாயிகள் கொல்லப்பட்டது அரசியல் ரீதியாக அனல் பறக்கும் வகையில் சூடு பிடித்துள்ளது. அங்குள்ள காங்., சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்கட்சிகள் போராட்டக்களத்தில் குதித்துள்ளன. இன்று காலை முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் வீட்டின் அருகே போலீசாருக்கும், சமாஜ்வாதி கட்சி தொண்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் போலீஸ் ஜீப்புக்கு தீ வைக்கப்பட்டதால் பதட்டம் நிலவுகிறது.



latest tamil news


உ.பி.,யில் இன்னும் 4 மாதத்திற்குள் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இதனால் நேற்று ஏற்பட்ட வன்முறையை அரசியலாக்க கட்சிகள் திட்டமிட்டு போராட்டத்தை வலுப்பெற செய்துள்ளதாகவே அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.


latest tamil news


காலையில் காங்., தலைவர் பிரியங்கா லக்கிம்பூர் கேரி பகுதிக்கு செல்ல முற்பட்டார். ஆனால் போலீசார் தடுத்து நிறுத்தி விட்டனர். இதனை தொடர்ந்து சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் இப்பகுதிக்கு செல்லக்கூடும் என அவரது வீட்டு முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் அகிலேஷ் வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டதாக கூறப்பட்டது.

இத்தகவல் பரவியதும் அவரது கட்சி தொண்டர்கள் அகிலேஷ் வீட்டு முன்பு குவிந்தனர். ஆளும் யோகி அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். அகிலேஷ் வீட்டில் இருந்து வெளியே வந்ததும் போலீசார் எங்கும் செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் அவரது வீட்டு அருகே தர்ணா போராட்டம் நடந்தது . இந்நேரத்தில் போலீஸ் ஜீப் தீ வைத்து எரிக்கப்பட்டது.


latest tamil news


தொடர்ந்து தொண்டர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது. மொத்தத்தில் உபி.,யில் தேர்தல் அரசியல் உஷ்ணம் துவங்கியிருப்பதையே காட்டுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramarao Ramanaidu - Kuala Lumpur,மலேஷியா
05-அக்-202109:15:36 IST Report Abuse
Ramarao Ramanaidu டேய் raj காங்கிரச கேள்வி கேளு ஏன் விவசாயிகள தூண்டி விடுறேன்னு ?
Rate this:
Cancel
Ramarao Ramanaidu - Kuala Lumpur,மலேஷியா
05-அக்-202109:13:17 IST Report Abuse
Ramarao Ramanaidu ஷாருக்கான் மகன் யாரு டா raj என்ற பெயரில் ஒளிந்திருக்கும்..
Rate this:
Cancel
Ramarao Ramanaidu - Kuala Lumpur,மலேஷியா
05-அக்-202101:05:55 IST Report Abuse
Ramarao Ramanaidu காங்கிரஸ் கட்சியை அழிக்க வேண்டும் ... வேறு வழி இல்லை ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X