சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஓட்டு சேகரிக்க சென்றவர் பைக் மோதி பலி

Added : அக் 04, 2021
Share
Advertisement
ஆம்பூர்: ஆம்பூர் அருகே, ஓட்டு சேகரிக்க சென்றவர் மீது பைக் மோதியதில் படுகாயமடைந்து சிகிச்சை பலனின்றி பலியானார்.திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் அருகே சின்ன வரிகம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு மஞ்சுளா என்பவர் பூட்டு சாவி சின்னத்தில் போட்டியிடுகிறார். இவருக்காக அதே பகுதியைச் சேர்ந்த அபோத்து, 55, என்பவர் நேற்றிரவு ஓட்டுக்கள் சேகரிக்க வீடு, வீடாக சென்று

ஆம்பூர்: ஆம்பூர் அருகே, ஓட்டு சேகரிக்க சென்றவர் மீது பைக் மோதியதில் படுகாயமடைந்து சிகிச்சை பலனின்றி பலியானார்.
திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் அருகே சின்ன வரிகம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு மஞ்சுளா என்பவர் பூட்டு சாவி சின்னத்தில் போட்டியிடுகிறார். இவருக்காக அதே பகுதியைச் சேர்ந்த அபோத்து, 55, என்பவர் நேற்றிரவு ஓட்டுக்கள் சேகரிக்க வீடு, வீடாக சென்று கொண்டிருந்தார்.
அவருடன் வந்தவர்கள் பட்டாசுக்களை வெடித்துக் கொண்டே சென்றனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த வெங்கட்டு, 55, என்பவர் பைக்கில் வந்த போது அவர் மீது பட்டாசு விழுந்து வெடித்தது. இதில் நிலைதடுமாறிய அவர் அபோத்து மீது பைக்கில் படுவேகமாக மோதினார்.
இதில், படுகாயமடைந்த அபோத்தை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின் மேல் சிகிச்சைகாக வேலுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அபோத்து இன்று இறந்தார். உம்மராபாத் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X