ஏவுகணை சோதனை விவகாரம்: ஐ.நா.,வுக்கு வடகொரியா எச்சரிக்கை

Updated : அக் 04, 2021 | Added : அக் 04, 2021 | கருத்துகள் (12)
Share
Advertisement
பியாங்யாங்: வடகொரியா கடந்த ஒரே மாதத்தில் 4 ஏவுகணைகளை சோதித்தது. இதுகுறித்து ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலின் அவசர கூட்டம் கடந்த 1ம் தேதி நடந்தது. கூட்டத்தில், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளுக்கு தடைவிதிக்கும் கவுன்சிலின் தீர்மானங்களை முழுமையாக செயல்படுத்த வடகொரியாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக ஐ.நா., பாதுகாப்பு

பியாங்யாங்: வடகொரியா கடந்த ஒரே மாதத்தில் 4 ஏவுகணைகளை சோதித்தது. இதுகுறித்து ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலின் அவசர கூட்டம் கடந்த 1ம் தேதி நடந்தது. கூட்டத்தில், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளுக்கு தடைவிதிக்கும் கவுன்சிலின் தீர்மானங்களை முழுமையாக செயல்படுத்த வடகொரியாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.



latest tamil news



இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலுக்கு வடகொரியா பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து வடகொரியா வெளியுறவு அமைச்சகத்தின் மூத்த அதிகாரியான ஜோ சோல் சூ தெரிவித்து உள்ளதாவது: அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகளால் இதேபோன்ற ஆயுத சோதனைகள் நடத்தப்படுகிறது. அதற்கு ஐ.நா., எதுவும் தெரிவிப்பதில்லை. ஆனால் எங்களிடம் கவுன்சிலின் தீர்மானங்களை முழுமையாக செயல்படுத்த வேண்டும் என, தெரிவிக்கிறது. இதிலிருந்தே, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சின் இரட்டை வேடம் தெரிகிறது.


latest tamil news



வடகொரியாவின் இறையாண்மையை ஆக்கிரமிக்க முயன்றால், எதிர்காலத்தில் அது என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை சிந்தித்து ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் செயல்பட வேண்டும். இவ்வாறு தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
05-அக்-202102:30:37 IST Report Abuse
Ganesan Madurai PLEASE DON'T REPEAT THE SAME COMMENT
Rate this:
Cancel
Mahesh - New Jersey,யூ.எஸ்.ஏ
05-அக்-202102:20:10 IST Report Abuse
Mahesh "ஏவுகணை சோதனை விவகாரம்: வட கொரியா.,வுக்கு ஐ.நா. எச்சரிக்கை" என்பதை "ஐ.நா.,வுக்கு வடகொரியா எச்சரிக்கை" - தலைப்பு தவறுதலாக போட்டுவிட்டீர்களோ என்று நினைத்தேன்....
Rate this:
Cancel
DVRR - Kolkata,இந்தியா
04-அக்-202117:12:22 IST Report Abuse
DVRR வட கொரியா முதலில் சொன்ன சொற்கள் சரி அமெரிக்கா...., பிறகு தம்கி /அதாவது ஐநா சபைக்கே எச்சரிக்கை என்றால் அவனை உடனே ஒழித்துக்கட்டவேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X