பொது செய்தி

தமிழ்நாடு

கோவிட் உயிரிழப்புகளில் 89% பேர் தடுப்பூசி செலுத்தாதவர்கள்; ஆய்வில் தகவல்

Updated : அக் 04, 2021 | Added : அக் 04, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில் கடந்த ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களில் 90 சதவீதம் பேர் கோவிட் தடுப்பூசி செலுத்தாதவர்கள் என ஆய்வில் தெரியவந்துள்ளது.தமிழகத்தில் கடந்த ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் ஏற்பட்ட கோவிட் நிலவரங்களை மருத்துவத்துறை ஆய்வு செய்து அதன் முடிவுகளை தெரிவித்துள்ளது. அதன்படி, கடந்த 2 மாதங்களில் 33,575 பேர் கோவிட்
Covid Vaccine, Covid Death, Vaccination, Tamilnadu, Health, கொரோனா, கோவிட், தடுப்பூசி, உயிரிழப்பு, தமிழகம், தமிழ்நாடு

சென்னை: தமிழகத்தில் கடந்த ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களில் 90 சதவீதம் பேர் கோவிட் தடுப்பூசி செலுத்தாதவர்கள் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் கடந்த ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் ஏற்பட்ட கோவிட் நிலவரங்களை மருத்துவத்துறை ஆய்வு செய்து அதன் முடிவுகளை தெரிவித்துள்ளது. அதன்படி, கடந்த 2 மாதங்களில் 33,575 பேர் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 23,827 பேர் (70.97 சதவீதம்) தடுப்பூசி செலுத்தாதவர்கள். முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் 6,020 பேர் (17.93%), இரண்டு டோஸ் தடுப்பூசியும் செலுத்தியவர்கள் 3,728 பேர் (11.1%) எனத் தெரியவந்துள்ளது.


latest tamil news


அதேபோல், ஆக., செப்., மாதங்களில் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்ட 33,575 பேரில் 268 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். அவர்களில் 129 பேர் (89.04 சதவீதம் பேர்) ஒரு டோஸ் தடுப்பூசி கூட செலுத்தாதவர்கள். முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களில் 94 பேரும் (7.41%), இரண்டு டோஸ் செலுத்திக் கொண்டவர்களில் 45 பேரும் (3.5%) உயிரிழந்துள்ளனர். முதல் டோஸ் மற்றும் இரண்டாம் டோஸ் தடுப்பூசி செலுத்தியும் உயிரிழப்பு ஏற்பட்டவர்களுக்கு தீவிர இணை நோய்கள் இருந்தததாக தெரிவித்துள்ள தமிழக மருத்துவத்துறை, தடுப்பூசி செலுத்திக்கொண்டால் கோவிட் தொற்றால் உயிரிழப்பு ஏற்படுவதை தவிர்க்கலாம் என வலியுறுத்தியுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ram RV -  ( Posted via: Dinamalar Android App )
04-அக்-202120:07:11 IST Report Abuse
Ram RV அது அல்ல செய்தி. 11 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள். அதுதான் கவலையளிக்கக் கூடிய விவாதிக்கப்பட வேண்டிய செய்தி.
Rate this:
Cancel
KUMAR. S - GUJARAT ,இந்தியா
04-அக்-202116:06:16 IST Report Abuse
KUMAR. S தவறான தகவல்..இதுதான் குமாரசாமி கணக்கு...
Rate this:
Cancel
Balaji - Chennai,இந்தியா
04-அக்-202114:49:31 IST Report Abuse
Balaji கணக்கை புத்தியை பயன்படுத்தி இப்படி நியாயமாக பாருங்கள்.. 23800 சொச்சம் ஊசி போடாதவர்களில் இறந்தது 129 அதாவது 0.54 %. ஒரு ஊசி குத்திய 6000 சொச்சத்தில் இறந்தவர்கள் 94 அதாவது 1.5 % ரெண்டு குத்திய 3700 சொச்சத்தில் இறந்தவர்கள் 45 அதாவது 1.2 % .. எங்கோ இடிக்கிறதே.. உண்மையை உண்மையாக பார்க்க விளைவோம்...
Rate this:
Balaji - Chennai,இந்தியா
04-அக்-202115:12:23 IST Report Abuse
Balajiஆமா 268 இல் 129 எப்படி 89 சதம் ஆகும்? தேவுடா... யாரைத்தான் நம்புவதோ...ஒன்றோ இரண்டோ ஊசி போட்டு இறந்தவர்கள் மொத்தம் 140 பேர்.. ஆகா ஊசி போட்டும் இறந்தவர்கள் அதிகம்.. எப்படியெல்லாம் திரித்து கணக்கு காண்பிக்கிறார்கள்......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X