பொது செய்தி

தமிழ்நாடு

புளியந்தோப்பு கே.பி.பார்க் குடியிருப்பு விவகாரம்: ஐஐடி குழு இறுதி அறிக்கை தாக்கல்

Added : அக் 04, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
சென்னை: சென்னை புளியந்தோப்பு கே.பி.பார்க் குடியிருப்பு குறித்த இறுதி அறிக்கையை ஐஐடி குழுவினர் தாக்கல் செய்துள்ளனர். நகர்புற வாழ்விட மேம்பட்டு வாரியத்தின் மேலாண் இயக்குனர் கோவிந்தராவிடம் ஐஐடி குழு அறிக்கையை தாக்கல் செய்தனர்.சென்னை, புளியந்தோப்புப் பகுதியில் குடிசை மாற்று வாரியத்தால் கே.பி.பார்க் குடியிருப்பு சுமார் ரூ.112 கோடி மதிப்பீட்டில் கடந்த 2016ல் கட்டப்பட்டது.
புளியந்தோப்பு, கேபிபார்க், குடியிருப்பு, ஐஐடி குழு, அறிக்கை

சென்னை: சென்னை புளியந்தோப்பு கே.பி.பார்க் குடியிருப்பு குறித்த இறுதி அறிக்கையை ஐஐடி குழுவினர் தாக்கல் செய்துள்ளனர். நகர்புற வாழ்விட மேம்பட்டு வாரியத்தின் மேலாண் இயக்குனர் கோவிந்தராவிடம் ஐஐடி குழு அறிக்கையை தாக்கல் செய்தனர்.

சென்னை, புளியந்தோப்புப் பகுதியில் குடிசை மாற்று வாரியத்தால் கே.பி.பார்க் குடியிருப்பு சுமார் ரூ.112 கோடி மதிப்பீட்டில் கடந்த 2016ல் கட்டப்பட்டது. மொத்தம் 864 வீடுகள் கொண்ட இந்த குடியிருப்பு கட்டடத்தில் சிமெண்ட் பூச்சு உதிர்வது குறித்து, அங்கு சமீபத்தில் குடியேறிய பொதுமக்கள் குற்றம்சாட்டி வந்தனர். இதன் காரணமாக குடிசை மாற்று வாரிய பொறியாளர்கள் இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதனைத்தொடர்ந்து, அமைச்சர்கள் சேகர்பாபு, தா.மோ.அன்பரசன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.


latest tamil news



பின்னர், கட்டுமான குறைபாடு குறித்து சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இதற்கிடையே, கட்டடத்தின் தரத்தை ஆய்வு செய்ய ஐஐடி சிறப்பு குழு அமைக்கப்பட்டது. கடந்த 29-ம் தேதி, நிபுணர் குழு முதல்வர் ஸ்டாலினிடம் வீடுகளின் தரம் குறித்த முழுமையான அறிக்கையை தாக்கல் செய்த நிலையில், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மேலாண் இயக்குனர் கோவிந்திராவிடம், கே.பி.பார்க் குடியிருப்பு கட்டடத்தின் தரம் குறித்த இறுதி ஆய்வறிக்கையை ஐஐடி நிபுணர் குழு தாக்கல் செய்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
04-அக்-202115:13:43 IST Report Abuse
D.Ambujavalli டெண்டர் ஒதுக்கீட்டிலிருந்தே எத்தனை சதவீதம் பெரிய இடத்துக்கு போயிற்று என்னும் விவரம் எதுவும் வெளிவராது கொடுத்த பொருள்களை வைத்து எந்த அளவு கட்ட முடியும் என்று எஞ்சினீர்கள் கேள்வி எழுப்பி, அமைச்சர் வரை போன பங்கு பற்றி சொல்ல முன்வருவார்களா? வரத்தான் விடுவார்களா? சஸ்பென் ஷனுடன் கேஸை முடிக்க தான் இந்த மொட்டை செய்தி, அறிக்கை எல்லாம் இவர்கள் சொல்வதை எழுதிக்கொடுப்பதுதானே மவுலிவாக்கம் அறிக்கை, அம்மா அன்று 'இடிமழை காரணம் இடிந்து விழுந்தது' என்று தீர்ப்பு எழுதியபின் ஜட்ஜ் அறிக்கை மாறியதா ?
Rate this:
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
04-அக்-202114:39:31 IST Report Abuse
வெகுளி IIT எல்லாம் எதுக்கு?....அல்லக்கை அரசன் தலைமையில் குழு அமைத்தால் விரும்பியபடி அறிக்கை ரெடி பண்ணிக்கலாம்....
Rate this:
Cancel
Raj - Chennai,இந்தியா
04-அக்-202114:16:49 IST Report Abuse
Raj இருக்கலாம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X