பொது செய்தி

இந்தியா

சோதனைக்கு தயாராகவுள்ள 700 கி.மீ., பயணித்து இலக்கை தாக்கும் ஏவுகணை: டி.ஆர்.டி.ஓ., அறிவிப்பு

Updated : அக் 04, 2021 | Added : அக் 04, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
புவனேஷ்வர்: இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஓ.,) ஐ.டி.சி.எம்., என்ற ஏவுகணையை உருவாக்கி உள்ளது. கப்பலில் இருந்து செலுத்தும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ள இந்த ஏவுகணை, நீண்ட தூரம் பயணித்து நிலப்பரப்பை தாக்கக் கூடியது. முற்றிலும் உள்நாட்டு தயாரிப்பிலேயே இந்த ஏவுகணை உருவாக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து டி.ஆர்.டி.ஓ., வெளியிட்டுள்ள

புவனேஷ்வர்: இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஓ.,) ஐ.டி.சி.எம்., என்ற ஏவுகணையை உருவாக்கி உள்ளது. கப்பலில் இருந்து செலுத்தும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ள இந்த ஏவுகணை, நீண்ட தூரம் பயணித்து நிலப்பரப்பை தாக்கக் கூடியது. முற்றிலும் உள்நாட்டு தயாரிப்பிலேயே இந்த ஏவுகணை உருவாக்கப்பட்டு உள்ளது.latest tamil newsஇதுகுறித்து டி.ஆர்.டி.ஓ., வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து உள்ளதாவது:
பல்வேறு வகை ஏவுகணைகளை தயாரித்துள்ள டி.ஆர்.டி.ஓ.,வின் நீண்ட தூரம் சென்று தாக்கக்கூடிய முதல் கப்பல் ஏவுகணை ஐ.டி.சி.எம்., தான். கடந்த ஆக., 11ம் தேதி இந்த ஏவுகணை சோதனை செய்யப்பட்டது. ஆனால் ஏவுகணையின் கட்டுப்பாட்டு அமைப்பில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக ஏவுகணை முழு வீச்சை கடக்கவில்லை. குறைபாடுகள் சரி செய்யப்பட்டு, தற்போது முழு அளவிலான சோதனை நடத்தப்படுகிறது.


latest tamil newsஒடிசாவில் உள்ள கடற்கரையில் வரும் 6 அல்லது 8ம் தேதி இந்த ஏவுகணை சோதனை திட்டமிட்டபடி நடைபெறும். வானிலையை பொறுத்து இதில் மாற்றம் ஏற்படலாம். இந்த ஏவுகணை 700 கி.மீட்டருக்கு மேல் பயணிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M Ramachandran - Chennai,இந்தியா
04-அக்-202119:49:11 IST Report Abuse
M  Ramachandran பல ஏவுகணைகளய் சோதித்து என்ன பயன். ஒன்றையாவது சீனன் தலையில் இறக்க வேண்டும்.சும்மா உதார் விட்டுக்கொண்டே இருந்தால் சீனன் பயப்பட மாட்டான்.தலையில் இடி இறங்கினால் தான் நம்புவான். அபோ பிடிப்பான் ஓட்டம் ரசியா பார்டரில் போய் தான் நிற்பான்..
Rate this:
Cancel
elakkumanan - Naifaru,மாலத்தீவு
04-அக்-202114:56:33 IST Report Abuse
elakkumanan அன்பும் பண்பும் நிறைந்த இம்ரான் அவர்களுக்கு...மேலே குறிப்பிடப்பட்டுள்ள செய்தியை உண்மைதானா என்று கண்டறிந்து சொல்லவும்...ஏன் போன்ற அறிவிலிகள் உங்களின் வழிகாட்டுதலும், ஆலோசனைகளும் வழிகாட்டியாக உதவி வருவதை தாங்கள் அறிவீர்கள்.. உங்களின் தயை கூர்ந்த அறிவுரைக்கு வழிமேல் விழிவைத்து காத்திருக்கும் கண்ணில்லா அடிமை.. உங்களின் கடன் வாங்க அலையும் பரபரப்புகளுக்கு நடுவே அடியேனின் தொந்தரவுக்கு மன்னிக்கவும்...அநேக நமஸ்காரங்களுடன் , கடை குடி மாக்கான்.........
Rate this:
தமிழ்ச்செல்வன் - Chennai,இந்தியா
04-அக்-202116:41:34 IST Report Abuse
தமிழ்ச்செல்வன்"கடை குடி மாக்கான்..." பாமரன், ஜெயஹிந்த்புரம், தமிழவேல்...
Rate this:
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
04-அக்-202119:57:02 IST Report Abuse
NicoleThomsonஉண்மையில் மனம் கனிந்த பாராட்டுகள்...
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
04-அக்-202114:45:19 IST Report Abuse
Vena Suna இம்ரான் கான் வீட்டிற்கே செல்லும் திறன் வாய்ந்தவை. ஹிஹிஹி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X