மனைவியை ரூ.500க்கு விற்ற 'பாசக்கார' கணவன்

Updated : அக் 04, 2021 | Added : அக் 04, 2021 | கருத்துகள் (48)
Share
Advertisement
ஆமதாபாத்: குஜராத்தில் தன் மனைவியை ரூ.500க்கு வேறொரு நபரிடம் கணவன் விற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பணம் தேவைப்படும் நேரத்தில் நகை, பொருட்களை அடமானம் வைப்பதையோ, விற்பதையோ கேள்விப்பட்டிருப்போம். ஆனால், ஒருவர் ரூ.500க்கு தன் மனைவியையே விற்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. குஜராத் மாநிலத்தில் 21 வயதுடைய பெண் ஒருவர் தன் கணவர் தன்னை வேறொரு நபரிடம் ரூ.500க்கு விற்றதாக
Woman, Sold Off, Husband, Rs 500, Raped, Gujarat, மனைவி, 500 ரூபாய், கணவர், குஜராத்

ஆமதாபாத்: குஜராத்தில் தன் மனைவியை ரூ.500க்கு வேறொரு நபரிடம் கணவன் விற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பணம் தேவைப்படும் நேரத்தில் நகை, பொருட்களை அடமானம் வைப்பதையோ, விற்பதையோ கேள்விப்பட்டிருப்போம். ஆனால், ஒருவர் ரூ.500க்கு தன் மனைவியையே விற்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. குஜராத் மாநிலத்தில் 21 வயதுடைய பெண் ஒருவர் தன் கணவர் தன்னை வேறொரு நபரிடம் ரூ.500க்கு விற்றதாக போலீசில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக போலீஸ் அதிகாரி மதன்லால் கட்வர்சா கூறியதாவது: எங்களிடம் இளம்பெண் ஒருவர் புகாரளிக்க வந்தார். அதில், செப்.,30ம் தேதி இரவு 9 மணியளவில் அங்குள்ள லக்கி ஹோட்டலுக்கு அப்பெண் தன் கணவர் தீரஜ் ஜாங்கிட் உடன் சென்றுள்ளார்.


latest tamil news


அங்கு வந்த சோனு சர்மா என்பவரிடம் தன் கணவர் ரூ.500ஐ பெற்றுக்கொண்டு, அந்த நபருடன் பெண்ணை போக சொல்லியுள்ளார். மறைவான பகுதிக்கு கூட்டிச்சென்ற சோனு சர்மா அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகாரில் தெரிவித்துள்ளார். இவ்வாறு போலீஸ் அதிகாரி கூறினார். இந்த புகாரையடுத்து பெண்ணின் கணவர் தீரஜ் ஜாங்கிட் மற்றும் சோனு சர்மாவை அடுத்த 24 மணிநேரத்தில் போலீசார் கைது செய்தனர். பாதிக்கப்பட்ட பெண் சிகார் பகுதியில் உள்ள காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (48)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
N.G.RAMAN - MADURAI,இந்தியா
06-அக்-202118:27:47 IST Report Abuse
N.G.RAMAN அது குஜராத் என்பதால் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு என்றால் கட்சியில் அவருக்கு பெரிய பதவியும் கொடுத்து விடுவார்கள். தற்போதைய சட்டமன்ற உறுப்பினரில் ஒருவர் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு இன்னும் வழக்கு முடியவில்லை. அவர் கைது செய்யப்படவும் இல்லை. அதற்கு பின்னரே அவருக்கு முக்கிய பொறுப்பும் தேர்தலில் சீட்டும் வழங்கப்பட்டது.
Rate this:
Cancel
N.Swaminathan - Vellore,இந்தியா
06-அக்-202109:44:35 IST Report Abuse
N.Swaminathan நான் பலபெயருடை கமெண்ட் வாசித்தேன் அதிலிருந்து நான் புரிந்துகொண்டது மோடி எதிர்ப்பு தமிழ் நாட்டில் மிகவும் அதிகம். இதுவொரு குடும்ப தவறு அதற்கு எவ்வாறு மோடியோ அல்லது குஜராத்தியரு காரணம் அவர்கள். தீவிரவாதி ஒரு முஸ்லீம் என்றால் எல்லா தீவிரவாதியும் முஸ்லீம் என்று சொல்லமுடியுமா. இந்த நிகழ்வு தண்டிக்கப்படவேண்டியது. தமிழ் நாட்டில் இதுபோல் எவ்வளவோ நிகழ்வு உள்ளது. அதற்காக தமிழன் எல்லோரும் இப்படி என்று சொல்வது சரியோ .
Rate this:
Cancel
Nesan - JB,மலேஷியா
05-அக்-202117:06:07 IST Report Abuse
Nesan மோடி ஆண்ட தேசத்திலே ... அங்கே எல்லோரும் மிக கட்டுபாடானவர்கள், என்று யோகாசனம் சொல்லுதே... விட்ருக்க மாட்டான் அனுப்பி இருப்பான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X