இறைச்சி கடைகளில் விற்பனை குறைந்தது| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இறைச்சி கடைகளில் விற்பனை குறைந்தது

Added : அக் 04, 2021
Share
குமாரபாளையம்: புரட்டாசி மாதம் என்பதால், குமாரபாளையத்தில் உள்ள இறைச்சி கடைகள் வெறிச்சோடி காணப்பட்டன. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, பல மாதங்களாக இறைச்சி கடைகள் செயல்பட அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் அவர்கள் வாழ்வாதாரம் இன்றி தவித்தனர். சில தளர்வுகளுடன் இறைச்சி கடைகள் மீண்டும் செயல்பட்டன. தற்போது புரட்டாசி மாதம் என்பதால் ஆட்டிறைச்சி, கோழி, மீன் இறைச்சி வாங்க

குமாரபாளையம்: புரட்டாசி மாதம் என்பதால், குமாரபாளையத்தில் உள்ள இறைச்சி கடைகள் வெறிச்சோடி காணப்பட்டன. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, பல மாதங்களாக இறைச்சி கடைகள் செயல்பட அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் அவர்கள் வாழ்வாதாரம் இன்றி தவித்தனர். சில தளர்வுகளுடன் இறைச்சி கடைகள் மீண்டும் செயல்பட்டன. தற்போது புரட்டாசி மாதம் என்பதால் ஆட்டிறைச்சி, கோழி, மீன் இறைச்சி வாங்க பொதுமக்கள் வராததால், குமாரபாளையத்தில் இறைச்சி கடைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X