பொது செய்தி

தமிழ்நாடு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை எம்.எல்.ஏ.,ஆய்வு

Added : அக் 04, 2021
Share
Advertisement
பள்ளிபாளையம்: பள்ளிபாளையம் அருகே அன்னை சத்யாநகர், களியனூர், பாதரை ஆகிய பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.,வுமான தங்கமணி ஆய்வு செய்தார்.பள்ளிபாளையம் சுற்றுவட்டாரத்தில் கடந்த, 1ல், இரவு முழுவதும் கனமழை கொட்டி தீர்த்தது. நீர்நிலைகள், சாலைகள், குடியிருப்பு பகுதிகள் என எங்கு பார்த்தாலும் மழை தண்ணீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஆறாக

பள்ளிபாளையம்: பள்ளிபாளையம் அருகே அன்னை சத்யாநகர், களியனூர், பாதரை ஆகிய பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.,வுமான தங்கமணி ஆய்வு செய்தார்.


பள்ளிபாளையம் சுற்றுவட்டாரத்தில் கடந்த, 1ல், இரவு முழுவதும் கனமழை கொட்டி தீர்த்தது. நீர்நிலைகள், சாலைகள், குடியிருப்பு பகுதிகள் என எங்கு பார்த்தாலும் மழை தண்ணீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஆறாக சென்றது. அன்று போக்குவரத்து முழுமையாக துண்டிக்கப்பட்டது. வெள்ளத்தால், ஒன்பதாம்படி பகுதியில் இரண்டு வீடுகள் சேதமடைந்தன. அன்னை சத்யாநகர் அடுக்குமாடி குடியிருப்பு பகுதி சுற்றிலும் வெள்ளம் சூழந்து ஆறாக சென்றது. பாதரையில் ஏரி அருகே சென்ற தார்ச்சாலையும், களியனூரில் தரைப்பாலமும் தண்ணீரில் அடித்து சென்றது. பாதிக்கப்பட்ட இடங்களை நேற்று முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.,வுமான தங்கமணி நேரில் ஆய்வு செய்தார். சேதமடைந்த பகுதிகளை உடனடியாக சீரமைக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். எம்.எல்.ஏ.,வுடன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் செந்தில், பஞ்சாயத்து தலைவர்கள் ரவி குழந்தைவேல், கணேசன் ஆகியோர் உடன் சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X