பொது செய்தி

தமிழ்நாடு

ப.வேலூரில் மனநலம் விழிப்புணர்வு நிகழ்ச்சி

Added : அக் 04, 2021
Share
Advertisement
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் மன நல திட்டம் சார்பில், ப.வேலூர் அரசு தலைமை மருத்துவமனையில் மனநல மேலாண் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. மனநல மருத்துவர் முகிலரசி பேசியதாவது: பயம், பதற்றம் என்பது எல்லாவித நோய்களிலும் ஒரு அறிகுறியாக தோன்றினாலும் சில சமயம் அதுவே ஒரு தனி நோயாக மனிதனை ஆக்கிரமித்து கொள்கிறது. தியானம், யோகா பயிற்சி, மூச்சுப் பயிற்சி போன்றவை இறுக்கம்

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் மன நல திட்டம் சார்பில், ப.வேலூர் அரசு தலைமை மருத்துவமனையில் மனநல மேலாண் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. மனநல மருத்துவர் முகிலரசி பேசியதாவது: பயம், பதற்றம் என்பது எல்லாவித நோய்களிலும் ஒரு அறிகுறியாக தோன்றினாலும் சில சமயம் அதுவே ஒரு தனி நோயாக மனிதனை ஆக்கிரமித்து கொள்கிறது. தியானம், யோகா பயிற்சி, மூச்சுப் பயிற்சி போன்றவை இறுக்கம் தளரவும், மனதில் அமைதி நிலவவும் உதவும். மன அழுத்தத்தை குறைக்க டிரஸ் பால் பயிற்சி மற்றும் மூச்சுப்பயிற்சி மேற்கொள்ளலாம். கொரோனாவில் இருந்து தற்காத்து கொள்ள முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி, கை சுத்தம் பேணுதல் போன்றவை விளக்கப்பட்டது. உடல், மனம், சமூகம் இந்த மூன்றிலும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். மன அழுத்தத்தையும் டென்சனையும் குறைக்க மூச்சுப்பயிற்சி அவசியம். ஆழமான சுவாசமானது பதற்றத்தை குறைக்கிறது. இவ்வாறு அவர் பேசினார். மனநல ஆலோசகர் ரமேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X