பொது செய்தி

தமிழ்நாடு

மரங்கள் வெட்டி சாய்ப்பு; அதிகாரியிடம் புகார்

Added : அக் 04, 2021
Share
Advertisement
பள்ளிபாளையம்: பள்ளிபாளையம் அருகே, ஒட்டமெத்தை பகுதியில் மூன்று மரங்கள் வேரோடு வெட்டி அகற்றப்பட்டன. இது குறித்து அப்பகுதி மக்கள், வருவாய்துறை அதிகாரியிடம் புகார் தெரிவித்துள்ளனர்.மேலும் அவர்கள் கூறியதாவது: ஒட்டமெத்தை, லட்சமி நகரில் சாலையோரத்தில் மூன்று பெரிய மரங்கள் இருந்தன. நேற்று முன்தினம் மின்பணியாளர் ஒருவர், மூன்று மரத்தையும் வேரோடு வெட்டி சாயத்து விட்டார்.

பள்ளிபாளையம்: பள்ளிபாளையம் அருகே, ஒட்டமெத்தை பகுதியில் மூன்று மரங்கள் வேரோடு வெட்டி அகற்றப்பட்டன. இது குறித்து அப்பகுதி மக்கள், வருவாய்துறை அதிகாரியிடம் புகார் தெரிவித்துள்ளனர்.


மேலும் அவர்கள் கூறியதாவது: ஒட்டமெத்தை, லட்சமி நகரில் சாலையோரத்தில் மூன்று பெரிய மரங்கள் இருந்தன. நேற்று முன்தினம் மின்பணியாளர் ஒருவர், மூன்று மரத்தையும் வேரோடு வெட்டி சாயத்து விட்டார். கேட்டால் மின் ஒயரில் உரசியதால் வெட்டினேன் என்றார். வலது புறத்தில் மரம் உள்ளது, இடது புறத்தில் மின் ஒயர் செல்கிறது. எந்த பாதிப்பும் இல்லை. அப்படியாக பாதிப்பு இருந்தாலும், மின் ஒயரில் உரசி செல்லும் கிளைகளை மட்டுமே வெட்டி அகற்ற வேண்டும். ஆனால் ஏதும் பாதிப்பு ஏற்படாமல் இருந்த மரத்தை வெட்டியுள்ளார். இது குறித்து குமாரபாளைம் தாசில்தார், சம்மந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரிடம் புகார் தெரிவித்துள்ளோம். இவ்வாறு அவர்ள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X