தேக்குமடை நிரம்பி உபரி நீர் வெளியேற்றம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தேக்குமடை நிரம்பி உபரி நீர் வெளியேற்றம்

Added : அக் 04, 2021
Share
பள்ளிபாளையம்: பள்ளிபாளையத்தில் கன மழையால், காந்திநகர் வாய்க்காலின் கடைசிபகுதியான தேக்குமடை நிரம்பி, உபரி நீர் அருவி போல வெளியேறி வருகிறது. மேட்டூர் அணையிலிருந்து கிழக்குகரை வாய்க்கால் துவங்கி, சேலம், நாமக்கல் மாவட்டம் வழியாக சென்று, 40 மைல் தூரமான பள்ளி பாளையம் அருகே காந்திநகர் பகுதியில் முடிவடைகிறது. இங்கு தேக்குமடை அமைத்து, தண்ணீர் தேக்கி வைக்கப்படுகிறது. பிரதான

பள்ளிபாளையம்: பள்ளிபாளையத்தில் கன மழையால், காந்திநகர் வாய்க்காலின் கடைசிபகுதியான தேக்குமடை நிரம்பி, உபரி நீர் அருவி போல வெளியேறி வருகிறது. மேட்டூர் அணையிலிருந்து கிழக்குகரை வாய்க்கால் துவங்கி, சேலம், நாமக்கல் மாவட்டம் வழியாக சென்று, 40 மைல் தூரமான பள்ளி பாளையம் அருகே காந்திநகர் பகுதியில் முடிவடைகிறது. இங்கு தேக்குமடை அமைத்து, தண்ணீர் தேக்கி வைக்கப்படுகிறது. பிரதான வாய்க்காலில் இருந்து, ஆங்காங்கே கிளை வாய்க்கால் பிரிகிறது. தண்ணீர் வரத்து பொறுத்து மதகு வழியாக, கிளை வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்ட வயல்வெளிகளின் கடைமடை வரை பாசனத்திற்கு தண்ணீர் செல்லும். இதன் பிறகு வரும் தண்ணீர் தேக்குமடைக்கு வந்து சேரும். பள்ளிபாளையம் சுற்றுவட்டாரத்தில் சில நாட்களாக கன மழை பெய்தது. இதனால் தேக்குமடைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து விட்டதால், தடுப்பணை தாண்டி, தண்ணீர் அருவி போல வெளியேறி வருகிறது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X