பொது செய்தி

தமிழ்நாடு

அமராவதி ஆற்றுப்பாசன பகுதிகளில் நெல் நடும் பணிகளில் சுறுசுறுப்பு

Added : அக் 04, 2021
Share
Advertisement
கரூர்: அமராவதி ஆற்றின் பாசன பகுதிகளில், நெல் நாற்று நடும் பணியில் விவசாயிகள் சுறுசுறுப்பாக ஈடுபட்டுள்ளனர். திருப்பூ மாவட்டம், உடுமலை பேட்டை அமராவதி அணையில் இருந்து கடந்த, மே, 20 முதல் முறை வைத்து குடிநீர் மற்றும் பாசன தேவைக்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விரைவில் சம்பா சாகுபடிக்காக அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இதனால், கரூர்

கரூர்: அமராவதி ஆற்றின் பாசன பகுதிகளில், நெல் நாற்று நடும் பணியில் விவசாயிகள் சுறுசுறுப்பாக ஈடுபட்டுள்ளனர். திருப்பூ மாவட்டம், உடுமலை பேட்டை அமராவதி அணையில் இருந்து கடந்த, மே, 20 முதல் முறை வைத்து குடிநீர் மற்றும் பாசன தேவைக்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விரைவில் சம்பா சாகுபடிக்காக அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இதனால், கரூர் மாவட்டத்தில் அமராவதி ஆற்றில் பாசன பகுதிகளான அரவக்குறிச்சி, க.பரமத்தி, தான்தோன்றிமலை மற்றும் கரூர் வட்டார பகுதிகளில் நெல் நடும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். மேலும், கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த ஐந்து நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், அமராவதி ஆற்றுப்பாசன பகுதிகளில் தழை சத்துக்காக பயிரிடப்பட்ட அவுரி செடியை நிலத்தில் உழவு ஓட்டும் பணியில் விவசாயிகள் தீவிரமாக உள்ளனர். தொடர்ந்து, நெல் நட வசதியாக வயல்களில் கரைகளை பலப்படுத்துதல் மற்றும் சமன் படுத்தும் பணிகளும், அமராவதி ஆற்றுப்பாசன பகுதிகளில் நடந்து வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X