பொது செய்தி

தமிழ்நாடு

ஆரம்ப சுகாதார நிலையம் தரம் உயர்த்த கோரிக்கை

Added : அக் 04, 2021
Share
Advertisement
கரூர்: எலவனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கரூர் மாவட்டம், க.பரமத்தி யூனியன் எலவனூர் கிராமத்தில், 3,500க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். சுற்றுப்புறத்தில் உள்ள சூடாமணி, ராஜபுரம் தொக்குப்பட்டிபுதூர், நஞ்சைக்காளக்குறிச்சிக்கு, எலவனூர் மைய பகுதியாக அமைந்துள்ளது. ஆனால், அவசர மருத்துவ உதவி தேவைப்பட்டால், 11

கரூர்: எலவனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கரூர் மாவட்டம், க.பரமத்தி யூனியன் எலவனூர் கிராமத்தில், 3,500க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். சுற்றுப்புறத்தில் உள்ள சூடாமணி, ராஜபுரம் தொக்குப்பட்டிபுதூர், நஞ்சைக்காளக்குறிச்சிக்கு, எலவனூர் மைய பகுதியாக அமைந்துள்ளது. ஆனால், அவசர மருத்துவ உதவி தேவைப்பட்டால், 11 கி.மீ., தூரத்தில் உள்ள சின்னதாராபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்குத் தான் செல்ல வேண்டும். அல்லது, எட்டு கி.மீ., தூரமுள்ள காசிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு செல்ல வேண்டும். எலவனூரில், அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையம் என்ற பெயரில், ஒரு கட்டடம் மட்டுமே உள்ளது. இங்கு ஒரு செவிலியர் மட்டும் பணியாற்றுகிறார். அவரும் அருகிலுள்ள துணை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு, பணி நிமித்தமாக சென்று விடுகிறார். இரவு நேரங்களில் மூச்சுத்திணறல், விஷக்கடி, பிரசவம், விபத்து ஏற்பட்டாலும், அங்கும் இங்கும் அலைமோதி தாமதமாகவே சிகிச்சை பெற வேண்டி உள்ளது. இந்த பகுதியில், போக்குவரத்து வசதியும் குறைவாக உள்ளது. இதை தரம் உயர்த்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X