பொது செய்தி

தமிழ்நாடு

கரூர் மாவட்டத்தில் பரவலாக தொடர் மழை

Added : அக் 04, 2021
Share
Advertisement
கரூர்: கரூர் மாவட்டத்தில், தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. கரூர் அருகே குகை வழிப்பாதையில் மழைநீர் தேங்கியதால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். அதிகபட்சமாக தோகைமலையில், 70 மி.மீ., மழை பெய்தது.வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த, ஐந்து நாட்களாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த நிலை, கரூர் மாவட்டத்திலும் நீடிக்கிறது. நேற்று முன்தினம் இரவு முதல்,

கரூர்: கரூர் மாவட்டத்தில், தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. கரூர் அருகே குகை வழிப்பாதையில் மழைநீர் தேங்கியதால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். அதிகபட்சமாக தோகைமலையில், 70 மி.மீ., மழை பெய்தது.


வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த, ஐந்து நாட்களாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த நிலை, கரூர் மாவட்டத்திலும் நீடிக்கிறது. நேற்று முன்தினம் இரவு முதல், கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், விடிய விடிய காற்றுடன் கூடிய மழை பெய்தது. நேற்று காலை, 8:00 மணி வரை கடந்த, 24 மணி நேரத்தில் கரூர் மாவட்டம் முழுவதும் பெய்த மழையளவு விபரம் (மி.மீ.,) கரூர், 28, அரவக்குறிச்சி, 15.5, அணைப்பாளையம், 19, க.பரமத்தி, 3, குளித்தலை, 22, தோகைமலை, 70, கிருஷ்ணராயபுரம், 18, மாயனூர், 26, பஞ்சப்பட்டி, 27.4, கடவூர், 60.2, பாலவிடுதி, 23.2, மயிலம்பட்டி, 31 மி.மீ., மழை பெய்தது. கரூர் மாவட்டம் முழுவதும் சராசரியாக, 28.61 மி.மீ., மழை பதிவானது.

குகை வழிப்பாதையில் தேங்கிய தண்ணீர்: கரூர் நகர் மற்றும் பெரிய குளத்துப்பாளையம் பகுதிகளை இணைக்கும் வகையில், ஈரோடு ரயில்வே வழித்தடம் குறுக்கே, குகை வழிப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. கரூர் நகரில் கடந்த சில நாட்களாக, தொடர்ந்து பெய்து வரும் மழையால், குகை வழிப்பாதையில் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.

ரெயின் கோட் விற்பனை அமோகம்: கரூர் மாவட்டத்தில், தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், கோவை, திருப்பூர் பகுதிகளில் இருந்த வந்த வியாபாரிகள், கரூர் நகரப்பகுதிகளில் ரெயின் கோட் கடைகளை சாலையோரத்தில் அமைத்துள்ளனர். ரெயின்கோட், 500 முதல், 1,500 ரூபாய் வரை விற்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X