கரூர் எம்.ஜி., சாலையில் கழிவுநீருடன் குப்பை

Added : அக் 04, 2021
Share
Advertisement
கரூர்: கரூர் நகராட்சி எம்.ஜி., சாலையில், கொட்டப்பட்டுள்ள குப்பையை சுற்றி கழிவுநீர் தேங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். கரூர், எம்.ஜி., சாலையில் கடந்த சில நாட்களாக அதிகளவில் குப்பை கொட்டப்படுகிறது. ஆனால் அவை அள்ளப்படாமல் பல நாட்களாக தேங்கியுள்ளது. மேலும் வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் இருந்து வெளியேறும் கழிவு நீர், குப்பையுடன்

கரூர்: கரூர் நகராட்சி எம்.ஜி., சாலையில், கொட்டப்பட்டுள்ள குப்பையை சுற்றி கழிவுநீர் தேங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். கரூர், எம்.ஜி., சாலையில் கடந்த சில நாட்களாக அதிகளவில் குப்பை கொட்டப்படுகிறது. ஆனால் அவை அள்ளப்படாமல் பல நாட்களாக தேங்கியுள்ளது. மேலும் வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் இருந்து வெளியேறும் கழிவு நீர், குப்பையுடன் சேர்ந்துள்ளதால், அப்பகுதியில் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும், மழை காரணமாக தேங்கியுள்ள குப்பையில் இருந்து துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் கொசு உற்பத்தியும் அதிகரித்துள்ளது. குப்பைக்கு சிலர் தீ வைத்து எரிக்கின்றனர். அப்போது, சாலை முழுவதும் புகை மண்டலமாக உள்ளதால், எதிரே வரும் வாகனங்கள் சரிவர தெரியாமல் வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர். எனவே, எம்.ஜி., சாலையில் தேங்கியுள்ள குப்பையை அகற்றவும், குப்பையில் தீ வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X