பொது செய்தி

தமிழ்நாடு

அடுத்த ஆண்டு முதல் பள்ளிகளில் சிலம்பம் பாடம்

Added : அக் 04, 2021
Share
Advertisement
புதுக்கோட்டை: ''தமிழக பள்ளிகளில் அடுத்த ஆண்டு முதல் சிலம்பம் பாடமாக கற்றுத் தரப்படும்,'' என்று விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார்.புதுக்கோட்டையில், 9வது வார்டு மாவட்ட கவுன்சிலர் பதவிக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க., வேட்பாளர் பழனிச்சாமியை ஆதரித்து, நேற்று பூங்குடி, முத்துக்காடு பகுதியில் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன்

புதுக்கோட்டை: ''தமிழக பள்ளிகளில் அடுத்த ஆண்டு முதல் சிலம்பம் பாடமாக கற்றுத் தரப்படும்,'' என்று விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார்.
புதுக்கோட்டையில், 9வது வார்டு மாவட்ட கவுன்சிலர் பதவிக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க., வேட்பாளர் பழனிச்சாமியை ஆதரித்து, நேற்று பூங்குடி, முத்துக்காடு பகுதியில் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக முதல்வர் நமது பாரம்பரிய விளையாட்டான சிலம்பக்கலைக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறார். அடுத்த ஆண்டு தமிழக பள்ளிகளில் சிலம்பம் ஒரு பாடமாக கற்றுத் தரப்படும். சிலம்பக்கலை ஆசிரியர்களுக்கு, 3 சதவீத இட ஒதுக்கீடு வேலைவாய்ப்பில் வழங்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வரின் முயற்சியால், தேசிய போட்டியில் சிலம்பம் சேர்க்கப்பட்டுள்ளது. சிலம்பம் பயிற்சி முறையாக கற்றுத்தரப்படும். தமிழக முதல்வர் பிளாஸ்டிக் ஒழிப்பதில் மிக தீவிரமாக உள்ளார். படிப்படியாக தமிழகம் பிளாஸ்டிக் இல்லாத மாநிலமாக மாற்றப்படும். நீலகிரி மாவட்டம் தற்போது பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமாக செயல்பட்டு வருகிறது. ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் தயாரிக்கும் தொழிற்சாலைகளை கண்டறிந்து, அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X