குழந்தைகள் சித்ரவதை: காப்பகத்திற்கு சீல்| Dinamalar

குழந்தைகள் சித்ரவதை: காப்பகத்திற்கு 'சீல்'

Added : அக் 04, 2021
புதுக்கோட்டை: அரசுப் பள்ளி ஆசிரியை முறைகேடாக நடத்திய காப்பகத்தில், குழந்தைகள் சித்ரவதை செய்யப்பட்டதால், அதற்கு 'சீல்' வைக்கப்பட்டது.புதுக்கோட்டை மாவட்டம், குடுமியான்மலையில், 'டாக்டர் குழந்தைகள் பாதுகாப்பு காப்பகம்' என்ற பெயரில் கலைமகள், 47, என்பவர் காப்பகம் நடத்தி வருகிறார். இவரது கணவர் ராஜேந்திரன், 51; இதன் கண்காணிப்பாளராக உள்ளார். கலைமகள், குடுமியான்மலையில்

புதுக்கோட்டை: அரசுப் பள்ளி ஆசிரியை முறைகேடாக நடத்திய காப்பகத்தில், குழந்தைகள் சித்ரவதை செய்யப்பட்டதால், அதற்கு 'சீல்' வைக்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம், குடுமியான்மலையில், 'டாக்டர் குழந்தைகள் பாதுகாப்பு காப்பகம்' என்ற பெயரில் கலைமகள், 47, என்பவர் காப்பகம் நடத்தி வருகிறார். இவரது கணவர் ராஜேந்திரன், 51; இதன் கண்காணிப்பாளராக உள்ளார். கலைமகள், குடுமியான்மலையில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாகவும் பணியாற்றி வருகிறார். வெளிநாடுகளில் இருந்து நிதி உதவி பெற்று, காப்பகத்தை நடத்தி வருகிறார். காப்பகத்தில் உள்ள சிறுவர்களை கொடுமைப் படுத்துவதாகவும், அரசு ஊழியர் எவ்வாறு காப்பகம் நடத்த முடியும் எனவும், புதுக்கோட்டை மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றன. இதையடுத்து, குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் குணசீலி தலைமையில் அதிகாரிகள் மற்றும் போலீசார் நேற்று காப்பகத்திற்கு சென்று, சோதனை செய்தனர். இதில், அரசு அனுமதி பெற்று இருந்தும், அரசு ஊழியராக பணியாற்றும் ஒருவர் எவ்வாறு காப்பகம் நடத்தி வருகிறார் என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அங்குள்ள சிறுவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்களை கொடுமைப் படுத்தியதும் தெரிந்தது. அதிகாரிகள் ஆய்வுக்கு வருவதை அறிந்த கலைமகள் மற்றும் ராஜேந்திரன் தலைமறைவாகி விட்டனர். சோதனைக்கு பின், காப்பகத்தில் இருந்து ஏழு சிறுவர்கள் மீட்கப்பட்டு, புதுக்கோட்டையில் உள்ள அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். காப்பகத்திற்கும் சீல் வைத்தனர். அன்னவாசல் போலீசார் வழக்கு பதிவு செய்து, கலைமகள் மற்றும் ராஜேந்திரனை தேடி வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X