சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ.8 லட்சம் கையாடல்: வங்கி கள அலுவலர் மீது வழக்கு

Added : அக் 04, 2021
Share
Advertisement
தர்மபுரி: போலி ஆவணங்கள் மூலம், எட்டு லட்ச ரூபாய் கையாடல் செய்த, எஸ்.பி.ஐ., வங்கி கள அலுவலர் மீது, நீதிமன்ற உத்தரவுபடி குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிந்துள்ளனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரை சேர்ந்தவர் மணிவண்ணன், 45; இவர் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் வங்கி மேலாளராக பணியாற்றினார். அப்போது, இவரது கட்டுப்பாட்டிலிருந்த தொப்பூர் எஸ்.பி.ஐ., வங்கி கிளையில், தர்மபுரி

தர்மபுரி: போலி ஆவணங்கள் மூலம், எட்டு லட்ச ரூபாய் கையாடல் செய்த, எஸ்.பி.ஐ., வங்கி கள அலுவலர் மீது, நீதிமன்ற உத்தரவுபடி குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரை சேர்ந்தவர் மணிவண்ணன், 45; இவர் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் வங்கி மேலாளராக பணியாற்றினார். அப்போது, இவரது கட்டுப்பாட்டிலிருந்த தொப்பூர் எஸ்.பி.ஐ., வங்கி கிளையில், தர்மபுரி அடுத்த வெண்ணாம்பட்டி வீட்டு வசதிவாரிய பிரிவை சேர்ந்த கிருஷ்ணவேணி, கள அலுவலராக பணியாற்றினார். இவர் கடந்த, 2012 அக்., 13ல், தர்மபுரி அடுத்த பிடமனேரியிலுள்ள சர்குரு, பூந்தழிர் என்ற மகளிர் மன்றங்களின் வங்கி கணக்கிலிருந்து, ?போலி ஆவணங்கள் மூலம், தலா இரண்டு லட்ச ரூபாய் பெற்றார். மேலும், 2012 நவ., 15ல் காரிமங்கலம் சமயபுரம் மகளிர் மன்றத்திலிருந்து, இரண்டு லட்ச ரூபாய், செப்., 21ல் பிடமனேரி அன்னை மகளிர் மன்றம் பெயரில் போலி ஆவணங்கள் மூலம், இரண்டு லட்ச ரூபாய் என, மொத்தம் எட்டு லட்ச ரூபாய் கையாடல் செய்துள்ளார். இதுகுறித்து மணிவண்ணன், தர்மபுரி மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றம், 2ல் வழக்கு தொடுத்தார். நீதிமன்ற உத்தரவின்படி, தர்மபுரி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், வங்கி கள அலுவலர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X