சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நள்ளிரவில் சுவர் இடிந்து தாய் பலி; மகன் சீரியஸ்

Added : அக் 04, 2021
Share
Advertisement
ஈரோடு: ஈரோட்டில் நள்ளிரவில் சுவர் இடிந்து விழுந்ததில், தாய் பலியானார். மகன் பலத்த காயத்துடன் சிகிச்சை பெறுகிறார். ஈரோடு, மரப்பாலம், நேதாஜி வீதியை சேர்ந்த கருப்பண்ணசாமி மனைவி ராஜம்மாள், 70; தனியார் மருத்துவமனையில் தொழிலாளியாக பணி செய்தார். மண் சுவரால் கட்டப்பட்ட, ஓடு வேய்ந்த வீட்டில் தனியாக வசித்தார். இரவில் மட்டும் மகன் ராமசாமி, 45, துணைக்கு தாய் வீட்டில் படுத்து

ஈரோடு: ஈரோட்டில் நள்ளிரவில் சுவர் இடிந்து விழுந்ததில், தாய் பலியானார். மகன் பலத்த காயத்துடன் சிகிச்சை பெறுகிறார். ஈரோடு, மரப்பாலம், நேதாஜி வீதியை சேர்ந்த கருப்பண்ணசாமி மனைவி ராஜம்மாள், 70; தனியார் மருத்துவமனையில் தொழிலாளியாக பணி செய்தார். மண் சுவரால் கட்டப்பட்ட, ஓடு வேய்ந்த வீட்டில் தனியாக வசித்தார். இரவில் மட்டும் மகன் ராமசாமி, 45, துணைக்கு தாய் வீட்டில் படுத்து கொள்வார். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் படுத்து தூங்கினர். நள்ளிரவு, 2:20 மணியளவில் வீடு இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் தாய், மகன் சிக்கி அலறினர். ஈரோடு தீயணைப்பு நிலைய வீரர்கள், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் இருவரையும் மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் தலை, கை, கால் மற்றும் உடம்பில் பலத்த காயமடைந்த ராஜம்மாளை சடலமாகவே மீட்க முடிந்தது. பலத்த காயமடைந்த ராமசாமியை, ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X