சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நள்ளிரவில் குடோனில் தீ: பல கோடி ரூபாய் மதிப்பு மஞ்சள் சேதம்

Added : அக் 04, 2021
Share
Advertisement
கோபி: ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி அருகே குடோன்களில் ஏற்பட்ட தீ விபத்தில், பல கோடி ரூபாய் மதிப்பில், ஆயிரக்கணக்கான மஞ்சள் மூட்டைகள் எரிந்து நாசமானது.ஈரோடு, சத்தி ரோட்டை சேர்ந்த சகோதரர்கள் ராஜேந்திரகுமார் அகர்வால், 55, சஞ்சய்குமார் அகர்வால், 53; இருவரும் கவுந்தப்பாடி, பெரியபுலியூர் அருகே தயிர்பாளையம் பிரிவு செல்லும் வழியில், சொந்தமாக நான்கு கிடங்கில், மஞ்சள் இருப்பு

கோபி: ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி அருகே குடோன்களில் ஏற்பட்ட தீ விபத்தில், பல கோடி ரூபாய் மதிப்பில், ஆயிரக்கணக்கான மஞ்சள் மூட்டைகள் எரிந்து நாசமானது.
ஈரோடு, சத்தி ரோட்டை சேர்ந்த சகோதரர்கள் ராஜேந்திரகுமார் அகர்வால், 55, சஞ்சய்குமார் அகர்வால், 53; இருவரும் கவுந்தப்பாடி, பெரியபுலியூர் அருகே தயிர்பாளையம் பிரிவு செல்லும் வழியில், சொந்தமாக நான்கு கிடங்கில், மஞ்சள் இருப்பு வைத்து, பாலீஸ் செய்கின்றனர். நேற்று முன்தினம் இரவு, 9:30 மணியளவில், அப்பகுதியில் இடி, மின்னலுடன் மழை பெய்தது. இந்நிலையில் அதிகாலை, 1:00 மணிக்கு, ஒரு குடோனில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதைக்கண்ட இரவு காவலர், நிறுவன உரிமையாளர்களுக்கு தகவல் தெரிவித்தார். அவர்களின் புகார்படி, பவானி தீயணைப்பு துறையினர், அதிகாலை, 2:00 மணிக்கு விரைந்தனர். அதற்குள் இரண்டாவது குடோனுக்கும் தீ பரவி இருந்தது. தீ பரவலை கட்டுப்படுத்த முடியாததால், கோபி, பெருந்துறை, ஈரோடு தீயணைப்பு நிலையங்களில் இருந்து, வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. அதிகமாக புகை வெளியேறியதால், தீயை அணைப்பதில் கடும் சிரமம் ஏற்பட்டது. இதனால் பொக்லைன் இயந்திரம் மூலம், குடோனின் சுவரை இடித்து, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஏறக்குறைய, பத்து மணி நேரத்துக்கு மேல் போராடி அணைத்தனர். மற்ற இரு குடோன்களுக்கும் தீ பரவுவது தடுக்கப்பட்டது. தீயில் ஆயிரக்கணக்கான மூட்டை மஞ்சள் எரிந்து நாசமாகி இருக்கலாம். இதன் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கலாம் எனவும் தெரிகிறது. மின்னல் தாக்கி தீப்பிடித்ததா அல்லது மின் கசிவால் விபத்து ஏற்பட்டதாக என்பது குறித்து, கவுந்தப்பாடி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X