காட்டுப்பன்றிகள் தாக்கி விவசாயி பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காட்டுப்பன்றிகள் தாக்கி விவசாயி பலி

Added : அக் 04, 2021
Share
ஓசூர்: கர்நாடகா மாநில எல்லையில், காட்டுப்பன்றிகள் தாக்கியதில் விவசாயி பலியானார்.கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை, கெம்ரேதொட்டியை சேர்ந்தவர் சிவமாதேவா, 44, விவசாயி; இவர், கர்நாடகா மாநில எல்லையிலுள்ள தன் விவசாய நிலத்தில் ராகி சாகுபடி செய்திருந்தார். தோட்டத்துக்கு நேற்று முன்தினம் இரவு காவலுக்கு சென்றார். அப்போது, அவரது நிலத்துக்கு வந்த காட்டுப்பன்றிகள்

ஓசூர்: கர்நாடகா மாநில எல்லையில், காட்டுப்பன்றிகள் தாக்கியதில் விவசாயி பலியானார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை, கெம்ரேதொட்டியை சேர்ந்தவர் சிவமாதேவா, 44, விவசாயி; இவர், கர்நாடகா மாநில எல்லையிலுள்ள தன் விவசாய நிலத்தில் ராகி சாகுபடி செய்திருந்தார். தோட்டத்துக்கு நேற்று முன்தினம் இரவு காவலுக்கு சென்றார். அப்போது, அவரது நிலத்துக்கு வந்த காட்டுப்பன்றிகள் கூட்டத்தை விரட்ட முயன்றபோது, அவை தாக்கி படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு, தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். முதலில் சிவமாதேவா யானை தாக்கி உயிரிழந்ததாக தகவல் வெளியானது. மாவட்ட வன அலுவலர் கார்த்திகேயினி, ஜவளகிரி வனச்சரகர் சுகுமார் விசாரணையில், காட்டுப்பன்றி தாக்கி அவர் உயிரிழந்ததும், சம்பவம் நடந்தது கர்நாடகா மாநில எல்லை என்பதும் தெரிந்தது. இதற்கிடையே, அவரது உறவினர்களை சந்தித்து ஆறுதல் கூறிய தளி, இ.கம்யூ.,-எம்.எல்.ஏ., ராமச்சந்திரன், மருத்துவமனைக்கு விசாரணைக்கு வந்திருந்த, கர்நாடகா மாநில வனத்துறை மற்றும் போலீசாரிடம், உரிய இழப்பீடு வழங்க கேட்டுக் கொண்டார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X