பொது செய்தி

தமிழ்நாடு

51 அடியை எட்டியது கே.ஆர்.பி., அணை; 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை

Added : அக் 04, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி: கே.ஆர்.பி., அணை நீர்மட்டம், 51 அடியை எட்டியதால், கரையோர ஐந்து மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.தென்பெண்ணை ஆற்றின் நீர் பிடிப்பு பகுதியில் தொடர் மழையால், கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணை நீர்மட்டம் கடந்த மாதம், 22ல், 51 அடியை எட்டியது. பின்னர் மழையின்றி நீர்வரத்து குறைந்தது. நேற்று முன்தினம் அணைக்கு நீர்வரத்து, 347 கன அடியாக இருந்த நிலையில், கடந்த

கிருஷ்ணகிரி: கே.ஆர்.பி., அணை நீர்மட்டம், 51 அடியை எட்டியதால், கரையோர ஐந்து மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
தென்பெண்ணை ஆற்றின் நீர் பிடிப்பு பகுதியில் தொடர் மழையால், கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணை நீர்மட்டம் கடந்த மாதம், 22ல், 51 அடியை எட்டியது. பின்னர் மழையின்றி நீர்வரத்து குறைந்தது. நேற்று முன்தினம் அணைக்கு நீர்வரத்து, 347 கன அடியாக இருந்த நிலையில், கடந்த மூன்று நாட்களாக மீண்டும் மழை பெய்ததால் நேற்று நீர்வரத்து, 498 கன அடியாக அதிகரித்தது. அணையின் மொத்த உயரமான, 52 அடியில், 1.66 டி.எம்.சி., தண்ணீரை தேக்கி வைக்கலாம். நேற்று காலை அணை நீர்மட்டம், 51 அடியாக உயர்ந்து, 1.54 டி.எம்.சி.,யாக நீர் இருப்பு இருந்தது. அணையிலிருந்து இடது மற்றும் வலது புற வாய்க்கால் மூலம், 177 கன அடியும், சிறிய மதகிலிருந்து தென்பெண்ணை ஆற்றில், 258 கன அடியும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணைக்கு நீர்வரத்தை ?பொறுத்தும், அணை பாதுகாப்பு கருதியும், ஆற்றில் கூடுதலாக தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளதால், பொதுப்பணித்துறை அதிகாரிகள், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்ட தென்பெண்ணை ஆற்றங்கரையோர மக்களுக்கு, மூன்றாவது முறையாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X