சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க., பிரமுகர் கொலையில் ஜாமினில் வெளிவந்தவர் விபரீதம்

Added : அக் 04, 2021
Share
Advertisement
மல்லூர்: அ.தி.மு.க., பெண் பிரமுகர் கொலை வழக்கில் தொடர்புடையவர், ஜாமினில் வெளி வந்த நிலையில், தற்கொலை செய்து கொண்டார். சேலம் மாவட்டம், மல்லூர் அருகே சந்தியூர் ஆட்டையாம்பட்டியை சேர்ந்தவர் ரமேஷ், 27. இவர் மேளம் அடித்தல், ஆட்டோ ஓட்டியும் வந்தார். 2020 மே, 20ல், அ.தி.மு.க., ஒன்றிய மகளிர் அணி தலைவி சாந்தா கொலை செய்யப்பட்டார். அந்த வழக்கில், ரமேஷ் கைது செய்யப்பட்டு, ஜாமினில் வெளிவந்தார்.

மல்லூர்: அ.தி.மு.க., பெண் பிரமுகர் கொலை வழக்கில் தொடர்புடையவர், ஜாமினில் வெளி வந்த நிலையில், தற்கொலை செய்து கொண்டார். சேலம் மாவட்டம், மல்லூர் அருகே சந்தியூர் ஆட்டையாம்பட்டியை சேர்ந்தவர் ரமேஷ், 27. இவர் மேளம் அடித்தல், ஆட்டோ ஓட்டியும் வந்தார். 2020 மே, 20ல், அ.தி.மு.க., ஒன்றிய மகளிர் அணி தலைவி சாந்தா கொலை செய்யப்பட்டார். அந்த வழக்கில், ரமேஷ் கைது செய்யப்பட்டு, ஜாமினில் வெளிவந்தார். நேற்று முன்தினம் மாலை, சந்தியூர் ஆட்டையாம்பட்டியில் உள்ள ஒரு காலிமனையில், விஷம் அருந்திய நிலையில் கிடந்தார். சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இவர் இரவு, 11:45 மணிக்கு உயிரிழந்தார். மல்லூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X