பொது செய்தி

தமிழ்நாடு

'ஊராட்சி செயலர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டால் சஸ்பெண்ட்'

Added : அக் 04, 2021
Share
Advertisement
வேலூர்: 'ஊராட்சி செயலர்கள், தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டால் சஸ்பெண்ட் செய்யப்படுவர்' என, அணைக்கட்டு தேர்தல் அதிகாரி கனகராஜ் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டம், அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியத்தில், 51 கிராம ஊராட்சிகள் உள்ளன. இதில், 50 ஊராட்சி செயலர்கள் பணியாற்றி வருகின்றனர். கந்தனேரி, இலவம்பாடி, அக்ராகரம், பாக்கம், குருவராஜ பாளயைம் ஆகிய ஐந்து ஊராட்சிகளில், செயலர்களின்

வேலூர்: 'ஊராட்சி செயலர்கள், தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டால் சஸ்பெண்ட் செய்யப்படுவர்' என, அணைக்கட்டு தேர்தல் அதிகாரி கனகராஜ் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டம், அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியத்தில், 51 கிராம ஊராட்சிகள் உள்ளன. இதில், 50 ஊராட்சி செயலர்கள் பணியாற்றி வருகின்றனர். கந்தனேரி, இலவம்பாடி, அக்ராகரம், பாக்கம், குருவராஜ பாளயைம் ஆகிய ஐந்து ஊராட்சிகளில், செயலர்களின் மனைவிகள் சுயேச்சையாக போட்டிடுவதாகவும், இதற்காக செயலர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதாகவும் புகார்கள் வந்தன. இது குறித்து, அணைக்கட்டு ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலரும், தேர்தல் அலுவலருமான கனகராஜ் வெளியிட்ட அறிக்கை: அணைக்கட்டு ஊராட்சியில் பணியாற்றும் செயலர்கள், அலுவலகம் சார்ந்த பணிகளில் மட்டுமே ஈடுபட வேண்டும். ஊராட்சி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டால் சஸ்பெண்ட் செய்யப்படுவர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X