பொது செய்தி

தமிழ்நாடு

தற்கொலை செய்து கொண்ட மாணவி குடும்பத்தினருக்கு ம.நீ.மய்யம் ஆறுதல்

Added : அக் 04, 2021
Share
Advertisement
வேலூர்: நீட் தேர்வு தோல்வி பயத்தால், தற்கொலை செய்து கொண்ட காட்பாடி மாணவி குடும்பத்தினருக்கு, மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் ஆறுதல் கூறினர்.வேலூர் மாவட்டம், காட்பாடி அருகே தலையாம்பட்டு கிராமத்தில் நீட் தேர்வு எழுதி தோல்வி பயத்தினால் மாணவி சவுந்தர்யா, 17, கடந்த மாதம், 15ல் தற்கொலை செய்து கொண்டார். மக்கள் நீதி மைய தலைவர் கமலஹாசன், தொலைபேசியில் தொடர்பு கொண்டு மாணவியின் தாய்

வேலூர்: நீட் தேர்வு தோல்வி பயத்தால், தற்கொலை செய்து கொண்ட காட்பாடி மாணவி குடும்பத்தினருக்கு, மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் ஆறுதல் கூறினர்.


வேலூர் மாவட்டம், காட்பாடி அருகே தலையாம்பட்டு கிராமத்தில் நீட் தேர்வு எழுதி தோல்வி பயத்தினால் மாணவி சவுந்தர்யா, 17, கடந்த மாதம், 15ல் தற்கொலை செய்து கொண்டார். மக்கள் நீதி மைய தலைவர் கமலஹாசன், தொலைபேசியில் தொடர்பு கொண்டு மாணவியின் தாய் ருக்மணியிடம், சவுந்தர்யா உயிரிழந்தது வேதனையளிக்கிறது. அரசியல் பேச இது நேரம் இல்லை. எங்களால் முடிந்ததை செய்கிறோம். இன்னும் எத்தனை பிள்ளைகளை இழக்கப் போகிறோமோ என தெரியவில்லை. உங்கள் உடல் நலனை பார்த்துக் கொள்ளுங்கள் என, ஆறுதல் கூறினார். இந்நிலையில், இறந்த மாணவியின் வீட்டிற்கு கமலஹாசன் நேற்று வருவதாக இருந்தது. சில சூழ்நிலைகளால் அவர் வரவில்லை. இதனால் கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் அனுஷாரவி, சவுந்தர்யா வீட்டிற்கு வந்து அவரது குடும்பத்தினரிடம் ஆறுதல் கூறினார். அப்போது செய்தி தொடர்பாளர் ராதா, மாவட்ட செயலாளர் சரவணன், மாநகர செயலாளர் திலீப் நாகேஷ்வரராவ், நிர்வாகிகள் சத்தியநாராயணன், பாஸ்கர், கிருஷ்ணமூர்த்தி உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X