இளம் பெண்ணை கர்ப்பமாக்கியவர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இளம் பெண்ணை கர்ப்பமாக்கியவர் கைது

Added : அக் 04, 2021
Share
ஆரணி: ஆரணி அருகே, திருமண ஆசை காட்டி இளம் பெண்ணை கர்ப்பமாக்கியவரை, போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அடுத்த வண்ணாங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் கோகிலா, 20, இவர் கடந்த, 2018ல், மொபைல்போனில் தொடர்பு கொண்டபோது, திருவண்ணாமலை அடுத்த அழகுசேனை கிராமத்தை சேர்ந்த அரவிந்த்குமார், 25, என்பவருக்கு ராங்கால் சென்றது. இதையடுத்து இருவரும் அடிக்கடி போனில்

ஆரணி: ஆரணி அருகே, திருமண ஆசை காட்டி இளம் பெண்ணை கர்ப்பமாக்கியவரை, போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அடுத்த வண்ணாங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் கோகிலா, 20, இவர் கடந்த, 2018ல், மொபைல்போனில் தொடர்பு கொண்டபோது, திருவண்ணாமலை அடுத்த அழகுசேனை கிராமத்தை சேர்ந்த அரவிந்த்குமார், 25, என்பவருக்கு ராங்கால் சென்றது. இதையடுத்து இருவரும் அடிக்கடி போனில் பேசிக்கொண்டு காதலை வளர்த்து கொண்டனர். அப்போது அரவிந்த்குமார், கோகிலாவிடம், திருமணம் செய்து கொள்வதாக கூறி அடிக்கடி உல்லாசமாக இருந்தார். இதில், கோகிலா கர்ப்பமடைந்த நிலையில், அரவிந்த்குமாரிடம் திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டார். அதற்கு அவர் மறுத்துவிட்டார். இது குறித்து, ஆரணி அனைத்து மகளிர் போலீசார் விசாரித்து அரவிந்த்குமாரை கைது செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X