விழுப்புரம், கடலுார் மாவட்டத்துக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

Added : அக் 04, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி : கே.ஆர்.பி., அணை நீர்மட்டம் 51 அடியை எட்டியதால், கரையோர ஐந்து மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணையின் மொத்த நீர்மட்டம் 52 அடி. இதில் 1.66 டி.எம்.சி., தண்ணீரைத் தேக்கி வைக்கலாம். நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மூன்று நாட்களாக கன மழை பெய்ததால், நேற்று நீர்வரத்து 498 கன அடியாக அதிகரித்தது.நேற்று காலை அணையின் நீர்மட்டம் 51 அடியாக
 விழுப்புரம், கடலுார் மாவட்டத்துக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கிருஷ்ணகிரி : கே.ஆர்.பி., அணை நீர்மட்டம் 51 அடியை எட்டியதால், கரையோர ஐந்து மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணையின் மொத்த நீர்மட்டம் 52 அடி. இதில் 1.66 டி.எம்.சி., தண்ணீரைத் தேக்கி வைக்கலாம். நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மூன்று நாட்களாக கன மழை பெய்ததால், நேற்று நீர்வரத்து 498 கன அடியாக அதிகரித்தது.நேற்று காலை அணையின் நீர்மட்டம் 51 அடியாக உயர்ந்தது. அணையிலிருந்து இடது மற்றும் வலது புற வாய்க்கால் வாயிலாக 177 கன அடியும், சிறிய மதகிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் 258 கன அடியும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

அணைக்கு நீர்வரத்தை ‍பொறுத்தும், அணை பாதுகாப்பு கருதியும், ஆற்றில் கூடுதலாக தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளது. பொதுப்பணித் துறை அதிகாரிகள், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலுார் மாவட்ட தென்பெண்ணை ஆற்றங்கரையோர மக்களுக்கு, மூன்றாவது முறையாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X