வா..தம்பி கொலு பார்க்க போவோம்

Updated : அக் 04, 2021 | Added : அக் 04, 2021
Share
Advertisement
நவராத்திரிக்கு சில நாட்களே உள்ள நிலையில் வித்தியாசமான பொம்மைகளின் வரவு அதிகரித்து உள்ளது. இது போன்ற பொம்மைகளை காணவும் வாங்கவும் வரும் பார்வையாளர்களால் சென்னை மைலாப்பூர் கபாலீசுவரர் கோவிலைச் சுற்றியுள்ள தெருக்கள் களைகட்டியுள்ளது.நவராத்திரி என்றாலே ஒன்பது நாட்களிலும் அவரவர் வீடுகளில் அவரவர் சக்திக்கு உள்பட்டு கொலுவைப்பர். இந்தக் கொலுவை



latest tamil news



நவராத்திரிக்கு சில நாட்களே உள்ள நிலையில் வித்தியாசமான பொம்மைகளின் வரவு அதிகரித்து உள்ளது. இது போன்ற பொம்மைகளை காணவும் வாங்கவும் வரும் பார்வையாளர்களால் சென்னை மைலாப்பூர் கபாலீசுவரர் கோவிலைச் சுற்றியுள்ள தெருக்கள் களைகட்டியுள்ளது.


latest tamil news


நவராத்திரி என்றாலே ஒன்பது நாட்களிலும் அவரவர் வீடுகளில் அவரவர் சக்திக்கு உள்பட்டு கொலுவைப்பர். இந்தக் கொலுவை பார்ப்பதற்கு அழைப்பும் விடுவர்.இதன் காரணமாக உறவும் நட்பும் புதப்பிக்கப்பட்டு இல்லங்களிலும் உள்ளங்களிலும் மகிழ்ச்சி பொங்கும்.


latest tamil news


Advertisement

கடந்த வருடம் கொரோனா காரணமாக யாரும், யார் வீட்டுக்கும் போகவுமில்லை அழைக்ககவுமில்லை. ஒரு நல்ல பண்டிகையை தவறவிட்ட எண்ணம் எல்லோர் மனதிலும் இருந்து வந்தது.


latest tamil news


அந்தக் குறையை நிறைவு செய்யும் வகையில் இந்த வருடம் பழைய பொம்மைகளுடன் புதிய பொம்மைகளையும் வைத்து கொண்டாட மக்கள் விரும்பியுள்ளனர் இதன் காரணமாக புதுமையான பல பொம்மைகள் விற்பனைக்கு வந்துள்ளன.


latest tamil news


பொம்மை என்றாலே சுவாமி அம்மன் சிலைகள்தான் நினைவிற்கு வரும் கடவுளர் சிலைகளையும் வழக்கம் போல இல்லாமல் வித்தியாசமாக செய்துள்ளனர் மேலும் சாமி பொம்மைகள் அல்லாமல் பல புதுமையான பொம்மைகளும் இங்கே இடம் பெற்றுள்ளது.


latest tamil news


குழந்தைகளை ஈர்க்கும் கோமாளி பொம்மை,முருகனின் தோள் மீது கைபோட்டு பேசும் விநாயகர் பொம்மை,கட்டிய வேட்டி தோளில் போட்ட துண்டுடன் கால்பந்து விளயைாடும் கணேசர்,ஆஞ்சநேயரை அணைத்துக்கொள்ளும் ராமர் இவைகளுடன் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவ பொம்மையும் உள்ளது உடன்பிறப்புகள் அந்தப் பக்கம் போனால் பார்க்கலாம் வாங்கலாம்.
மைலாப்பூர் கபாலீசுவரர் கோவில் தெருக்களை சுற்றி நுாற்றுக்கணக்கான பொம்மை கடைகள் முளைத்துள்ளன.இவர்கள் விற்பதற்கும் மக்கள் நின்று வாங்குவதற்கும் ஏற்ற வகையில் தடுப்பு வைத்து போலீசார் உதவி வருகின்றனர்.
-எல்.முருகராஜ்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X