பொது செய்தி

தமிழ்நாடு

ஊரக உள்ளாட்சி முதற்கட்ட தேர்தல் பிரசாரம் நிறைவு

Updated : அக் 04, 2021 | Added : அக் 04, 2021 | கருத்துகள் (2+ 1)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில் ஒன்பது மாவட்டங்களுக்கான முதல்கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலின் பிரசாரம் இன்று (அக்.,04) மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது.காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில், வரும் 6 மற்றும் 9ம் தேதிகளில், இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. அத்துடன், 28
Tamilnadu, Local Body Election, First Phase, Election Campaign, உள்ளாட்சி தேர்தல், தமிழகம், பிரசாரம், ஓய்ந்தது, நிறைவு, முதல்கட்ட தேர்தல்

சென்னை: தமிழகத்தில் ஒன்பது மாவட்டங்களுக்கான முதல்கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலின் பிரசாரம் இன்று (அக்.,04) மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில், வரும் 6 மற்றும் 9ம் தேதிகளில், இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. அத்துடன், 28 மாவட்டங்களில் காலியாக உள்ள பதவிகளுக்கும் இடைத்தேர்தல் நடக்கிறது. ஒன்பது மாவட்டங்களில் 23 ஆயிரத்து 998 பதவிகளை கைப்பற்ற, 79 ஆயிரத்து 433 பேர் போட்டியிடுகின்றனர்.


latest tamil news


இந்நிலையில், முதற்கட்டமாக 6ம் தேதி தேர்தல் நடக்கவுள்ள பகுதிகளில், இன்று (அக்.,04) மாலை 5 மணியுடன் பிரசாரம் முடிவடைந்தது. மொத்தம் 78 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், 755 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், 1,577 கிராம ஊராட்சி தலைவர் பதவிகளுக்கு இந்த முதல் கட்ட தேர்தலில் ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. முதல்கட்ட உள்ளாட்சி தேர்தலில் 41.93 லட்சம் வாக்காளர்கள் ஓட்டளிக்க உள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (2+ 1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
04-அக்-202121:09:29 IST Report Abuse
அருணா இனி கொரோனா வராதா கூட்டத்தில் முககவசம் மிஸ்ஸிங்.
Rate this:
Cancel
sundarsvpr - chennai,இந்தியா
04-அக்-202117:37:49 IST Report Abuse
sundarsvpr முதல் வகுப்பில் இருந்து தொடர்ந்து படிப்பதுதான் வரையறுக்கப் பட்டது. இதில் சிறிய விலக்கும் உண்டு. படிக்காத மேதைகளும் அமையலாம் அதுபோல் கிராம தேர்தல்கள் நடத்தாமல் மற்றைய தேர்தல் நடத்துவது நாட்டின் உண்மை அடிப்படை தேவைகள் . நிறைவேறாமல் போக வாய்ப்பு உண்டு. இதனை நடத்திட ஏன் முயற்சி இல்லை என்பது ஒரு புதிர்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X