பொது செய்தி

தமிழ்நாடு

தேசிய மல்யுத்த போட்டிக்கு கரூர் மாணவர்கள் தகுதி

Added : அக் 04, 2021
Share
Advertisement
கரூர்: தேசிய மல்யுத்த போட்டிக்கு தகுதி பெற்ற மாணவர்களுக்கு கரூர் அரசு கலைக்கல்லூரியில் வரவேற்பு அளிக்கப்பட்டது.சேலம் அடுத்த மேட்டூரில் தமிழகத்தின் 38 மாவட்டங்களிலிருந்து சுமார் 360 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்ட மாநில அளவிலான மல்யுத்தப் போட்டி, தமிழ்நாடு மல்யுத்த சங்கம் சார்பாக இரண்டு நாட்களாக நடைபெற்றது. இந்த போட்டியில் கரூர் அரசு கலைக் கல்லூரி சார்பில் 10
தேசிய மல்யுத்த போட்டிக்கு கரூர் மாணவர்கள் தகுதி

கரூர்: தேசிய மல்யுத்த போட்டிக்கு தகுதி பெற்ற மாணவர்களுக்கு கரூர் அரசு கலைக்கல்லூரியில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
சேலம் அடுத்த மேட்டூரில் தமிழகத்தின் 38 மாவட்டங்களிலிருந்து சுமார் 360 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்ட மாநில அளவிலான மல்யுத்தப் போட்டி, தமிழ்நாடு மல்யுத்த சங்கம் சார்பாக இரண்டு நாட்களாக நடைபெற்றது. இந்த போட்டியில் கரூர் அரசு கலைக் கல்லூரி சார்பில் 10 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
அதில், ஆறு மாணவர்கள் ஷ்ரிவர்சன் 66 கிலோ எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கமும், பெரியசாமி 77 கிலோ எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கமும், சிபிராஜ் 58 கிலோ எடை பிரிவில் வெண்கலப் பதக்கமும், ஆகாஷ் 70 கிலோ எடை பிரிவில் தங்கப் பதக்கமும், மனோஜ் 58 கிலோ எடைப்பிரிவில் தங்கப் பதக்கமும், காயத்ரி 64 கிலோ எடை பிரிவில் தங்கப்பதக்கம் பெற்று கரூர் அரசு கலைக் கல்லூரிக்கு பெருமை சேர்த்தனர்.
இதில், தங்கப்பதக்கம் பெற்ற மூன்று நபர்களும் அடுத்த வாரம் டில்லியில் இந்திய மல்யுத்தம் சங்கம் சார்பாக நடைபெறவுள்ள போட்டிக்கு தேர்வாகியுள்ளனர். இந்த பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைக்கு கரூர் அரசு கலைக் கல்லூரி உடற்கல்வித்துறை சார்பில் அதன் இயக்குனர் ராஜேந்திரன் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கல்லூரி முதல்வர் கௌசல்யாதேவி மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X