ஆர்யன் கானை ஜாமினில் விட மறுப்பு: அக்.,7 வரை காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

Updated : அக் 04, 2021 | Added : அக் 04, 2021 | கருத்துகள் (20)
Share
Advertisement
மும்பை: பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் போதை பொருள் பயன்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டதை அடுத்து போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அவருக்கு ஜாமின் மறுத்த நீதிமன்றம், அக்.,7 வரை காவலில் எடுத்து விசாரிக்க போதைப்பொருள் தடுப்பு பிரிவுக்கு அனுமதி அளித்துள்ளது.தெற்கு மும்பையில் இருந்து கோவாவிற்குச் செல்லும் சொகுசு
Aryan Khan, Custody, Accused, No Bail, Hearing, ஆர்யன் கான், காவல், சிறை, போதைப்பொருள், நீதிமன்றம், ஜாமின் மறுப்பு, விசாரணை

மும்பை: பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் போதை பொருள் பயன்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டதை அடுத்து போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அவருக்கு ஜாமின் மறுத்த நீதிமன்றம், அக்.,7 வரை காவலில் எடுத்து விசாரிக்க போதைப்பொருள் தடுப்பு பிரிவுக்கு அனுமதி அளித்துள்ளது.

தெற்கு மும்பையில் இருந்து கோவாவிற்குச் செல்லும் சொகுசு கப்பலில் விடியவிடிய செல்வந்தர்கள் கலந்துகொள்ளும் மது விருந்து நடைபெற்றது. நள்ளிரவு நேரத்தில் திடீரென போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் இந்த கப்பலில் ரெய்டு நடத்தினர். அப்போது அந்த நிகழ்வில் கலந்துகொண்ட சிலரிடமிருந்து உயர்ரக போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இதில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானும் அடக்கம். இதனைத்தொடர்ந்து இவர்கள் கைது செய்யப்பட்டனர். ஆர்யன் கான் போதை பொருளுக்கு அடிமையாகி உள்ளாரா என்று பரிசோதிக்க இன்று (அக்.,04) அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.


latest tamil news


பொதுவாக போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு ஜாமின் கிடைப்பது எளிது. இவர்கள் மறுவாழ்வு மையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்படுவர். இந்த சிகிச்சைக்காக இவர்களுக்கு ஜாமின் வழங்க வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது. முன்னதாக ஜேஜே மருத்துவமனையில் ஆரியன் உள்ளிட்ட ஏழு பேருக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை நடத்தப்பட்டது. சோதனை முடிந்து எஸ்பிளனேடு மாஜிஸ்த்ரேட் நீதிமன்றத்தில் இவர்கள் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது இவர்களுக்கு ஜாமின் தர மறுத்த நீதிமன்றம், ஆர்யன் கான் உள்ளிட்ட ஏழு பேரை அக்.,7ம் தேதி வரை காவலில் விசாரிக்க போதைப்பொருள் தடுப்பு போலீசுக்கு அனுமதி அளித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
05-அக்-202119:22:51 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் 21000 கோடி ஹெராயினை கடத்திக் கொண்டாந்த தேசபக்தாள்ஸ எந்த காஃனும் இல்லை. மாட்டிறைச்சியை ஏற்றுமதி பண்றதிலே முன்னாலே நிக்கிறதும் எந்த காஃனும் இல்லை. ஹெராயின் கடத்தி வந்து உள்ளூர்லே விக்கிறதும் நம்ம இந்துக்கள் தான் மெஜாரிட்டி. அவ்வளவு ஏன் பாஃங்க் (கஞ்சா) உருண்டை பாலில் கலந்து சிவன் பிரசாதம்ன்னு மொடக் மொடக்குன்னு குடிக்கிறவன் எந்த காஃனும் இல்லை. அது தெரிஞ்சே இங்கே நூலிபான்ஸ் கூவிக்கிட்டு இருக்கானுங்க.
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
08-அக்-202108:57:36 IST Report Abuse
 Muruga Velஅரைகுறையாய் இருக்கறப்போவே ரொம்ப கருத்து போடற .....
Rate this:
Cancel
Madhu - Trichy,இந்தியா
04-அக்-202122:04:33 IST Report Abuse
 Madhu "களங்கம் இருந்தா என்ன பாரு .. அதுக்கும் நிலானுதான் பேரு" .. இப்படி சொன்னவரும் சினிமாத் துறையைச் சேர்ந்த ஒரு கவிஞர்."
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
04-அக்-202121:35:25 IST Report Abuse
sankaseshan Dhuruvesh நீ குஜராத்துக்கு பொய் விசாரித்து வா நாங்களும் உண்மை காரணத்தை தெரிஞ்சுக்கறோம் அப்பனை பார்த்து பிள்ளை கத்துக்காரன் அப்பன் குடிகாரன் போதை பழக்கம் இருக்கலாம் பிள்ளையும் அதே வழியில் போகிறான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X