கோவிட் பலிக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு : மத்திய அரசு திட்டத்துக்கு கோர்ட் அனுமதி

Updated : அக் 04, 2021 | Added : அக் 04, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
புதுடில்லி : கோவிட்டால் பலியானோர் குடும்பத்தாருக்கு 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கும் மத்திய அரசின் திட்டத்துக்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. கோவிட்டால் பலியானோர் குடும்பத்தாருக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இதை விசாரித்த உச்ச நீதிமன்றம் இழப்பீடு வழங்குவது தொடர்பான வழிமுறைகளை உருவாக்கும்படி, தேசிய
கோவிட் பலி, ரூ.50 ஆயிரம் ,இழப்பீடு , கோர்ட், அனுமதி

புதுடில்லி : கோவிட்டால் பலியானோர் குடும்பத்தாருக்கு 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கும் மத்திய அரசின் திட்டத்துக்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

கோவிட்டால் பலியானோர் குடும்பத்தாருக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இதை விசாரித்த உச்ச நீதிமன்றம் இழப்பீடு வழங்குவது தொடர்பான வழிமுறைகளை உருவாக்கும்படி, தேசிய பேரிடர் நிர்வாக ஆணையத்துக்கு உத்தரவிட்டிருந்தது.


latest tamil news



செப்., 3ம் தேதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது வழிமுறைகள் உருவாக்க அதிக காலம் எடுத்துக் கொள்வதற்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் கொரோனாவால் பலியானோர் குடும்பத்தாருக்கு 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க தேசிய பேரிடர் நிர்வாக ஆணையம் பரிந்துரைத்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது. மாநில பேரிடர் நிர்வாக நிதியில் இருந்து இந்தத் தொகை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.


இந்த வழக்கு இன்று (அக்.04) விசாரணைக்கு வந்த , கொரோனாவால் பலியானோர் குடும்பத்துக்கு 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கும் மத்திய அரசின் திட்டத்தை ஏற்கிறோம்; இது உலக நாடுகளுக்கு ஒரு முன்னுதாரணமாக அமையும். மத்திய, மாநில அரசுகள் ஏற்கனவே அறிவித்துள்ள, அளித்துள்ள இழப்பீடுகளைத் தவிர, இந்தத் தொகை கூடுதலாக வழங்கப்பட வேண்டும்.இவ்வாறு உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
05-அக்-202110:33:13 IST Report Abuse
அப்புசாமி ஆளுக்கு 15 லட்சம் போடுவோம்னு சொன்னவங்க ... போட்டுட்டதால கஜானாவுல பணம் தீந்து போயிருக்கும். அதான கொரோனாவுல போனவங்க குடும்பத்துக்கு 4 லட்சம் குடுப்போம்னவங்க 50 ஆயிரத்துக்கு வந்துட்டாங்க...
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
05-அக்-202106:25:04 IST Report Abuse
Mani . V Please don't repeat the same comments
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
05-அக்-202106:23:35 IST Report Abuse
Mani . V நிவாரணம் வழங்குவது ஒரு பக்கம் இருக்கட்டும். அரசு உத்தரவை மதிக்காமல் ஊர் சுற்றித் திரிந்து கொரோனாவை வரவழைத்துக் கொண்டு இறப்பவர்களுக்கும், சட்டத்தை மதிக்காமல் கூட்டம் கூட்டி அரசியல்வாதிகள் கொரோனாவை பரவச் செய்து அதன் மூலம் இறப்பவர்களுக்கும் நிவாரணம் வழங்குவது ஒரு தவறான முன்னுதாரம் என்றே தோன்றுகிறது. அதுபோல் அரசியல் கூட்டத்தில் பங்கு பெற்றவர்கள் கொரோனா வந்து இறந்தால், அவர்களுக்கான இழப்பீடை அந்த குறிப்பிட்ட அரசியல்வாதியிடம் வசூலிக்க வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X