சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Added : அக் 04, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
முதல்வர் ஸ்டாலின்: விவேகமும், பொறுப்புணர்வும் கொண்ட அரசிற்கு, நீங்கள் தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும். ஏராளமான திட்டங்களை வரிசையாக கொண்டு வர இருக்கிறோம். அதற்கு மக்கள் ஒத்துழைப்பு அவசியம். எவ்வளவு சிறந்த திட்டங்களை தீட்டினாலும், உள்ளாட்சி அமைப்புகள் வாயிலாகவே, அது மக்களை சேரும். எனவே, உள்ளாட்சியிலும் நல்லாட்சி அமைய, தி.மு.க., கூட்டணிக்கு ஓட்டளிக்க வேண்டும். 'டவுட்'

'டவுட்' தனபாலு

முதல்வர் ஸ்டாலின்: விவேகமும், பொறுப்புணர்வும் கொண்ட அரசிற்கு, நீங்கள் தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும். ஏராளமான திட்டங்களை வரிசையாக கொண்டு வர இருக்கிறோம். அதற்கு மக்கள் ஒத்துழைப்பு அவசியம். எவ்வளவு சிறந்த திட்டங்களை தீட்டினாலும், உள்ளாட்சி அமைப்புகள் வாயிலாகவே, அது மக்களை சேரும். எனவே, உள்ளாட்சியிலும் நல்லாட்சி அமைய, தி.மு.க., கூட்டணிக்கு ஓட்டளிக்க வேண்டும்.

'டவுட்' தனபாலு: சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, உள்ளாட்சி தேர்தலில் தோல்வி அடைந்து விட்டால் அசிங்கமாக போய்விடும். இதை தவிர்க்க அமைச்சர்களும், கட்சி பிரமுகர்களும் களம் இறக்கி விடப்பட்டு உள்ளனர். உள்ளாட்சி தேர்தல் தேதி முன்கூட்டியே தெரிந்து இருந்தால் சலுகை திட்டங்கள் பலவற்றையும் இறக்கி விட்டிருக்கும் தி.மு.க., இப்போது என்னசெய்யப் போகிறதோ என்பது தான், 'டவுட்' ஆக உள்ளது!


நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்:
ஏற்கனவே போதிய நெல் கொள்முதல் நிலையங்கள் இல்லாததால், விளைவித்த நெல்லை விற்க முடியாமல் விவசாயிகள் அவதிப்படுகின்றனர். இந்நிலையில், கொள்முதல் நிலையங்களில் நெல்லை விற்பனை செய்ய, இணையம் வழியே முன்பதிவு செய்ய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. விவசாயிகளுக்கு எதிரான இந்த உத்தரவு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

'டவுட்' தனபாலு: பல கிராமங்களில் உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. இந்த நிலையிலும், நெல் கொள்முதல் நிலையங்களின் நிலைமை மாறவில்லை. மேலும், இணையத்திலும் பதிவு செய்ய வேண்டும் என வேறு கட்டாயப்படுத்துவதால், தமிழக விவசாயிகளின் ஓட்டு தங்களுக்கு வேண்டாம் என ஆளும் கூட்டணி நினைத்து விட்டதோ என்ற, 'டவுட்' வருகிறது!


மாநில பா.ஜ., தலைவர் அண்ணாமலை
: நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் வாக்களித்து, தி.மு.க.,வை ஆட்சிக்கு கொண்டு வந்தீர்கள். அவர்கள் அளித்த தேர்தல் வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றினரா? தேர்தல் பிரசாரத்தின்போது நகையை அடகு வைத்து கடன் வாங்க சொன்ன தி.மு.க.,வினர், நகையை அடகு வைத்தோர் மீது இப்போது வழக்கு போடுகின்றனர். உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.,வுக்கு ஓட்டளித்து மறுபடியும் தவறு செய்யாதீர்கள்.

'டவுட்' தனபாலு: சட்டசபை, லோக்சபா தேர்தல் போல இல்லாமல், வித்தியாசமான தேர்தலாக கருதப்படும் ஊரக உள்ளாட்சி தேர்தல், நிச்சயம், தி.மு.க., அரசுக்கு அக்னிப்பரீட்சையாகத் தான் இருக்குமோ என்ற, 'டவுட்' எழுகிறது!

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
05-அக்-202115:16:46 IST Report Abuse
D.Ambujavalli உள்ளாட்சித் தேர்தலிலும் பணம், பிரியாணி, குவார்ட்டர் விளையாடுவதிலிருந்து கவுன்சிலர்களும் காசு தேற்றதான் நிற்பது தெரிகிறது பா ஜ தங்கள் பங்குக்கு இறக்கிப் பார்க்கட்டுமே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X