சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

தி.மு.க.,வினருக்கு நிகர் யாருமில்லை!

Added : அக் 04, 2021
Share
Advertisement
தி.மு.க.,வினருக்கு நிகர் யாருமில்லை!என்.மல்லிகை மன்னன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'சட்டசபை தேர்தலின் போது தி.மு.க., அளித்த 505 வாக்குறுதிகளில், 202 வாக்குறுதிகளை, பதவிக்கு வந்த 142 நாட்களில் நிறைவேற்றி விட்டோம். இது மாதிரி மகத்தான சாதனைகளை, இந்தியாவில் வேறு எந்த மாநில அரசும் செய்ததில்லை' என தம்பட்டம் அடித்திருக்கிறார் முதல்வர்


தி.மு.க.,வினருக்கு நிகர் யாருமில்லை!என்.மல்லிகை மன்னன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'சட்டசபை தேர்தலின் போது தி.மு.க., அளித்த 505 வாக்குறுதிகளில், 202 வாக்குறுதிகளை, பதவிக்கு வந்த 142 நாட்களில் நிறைவேற்றி விட்டோம். இது மாதிரி மகத்தான சாதனைகளை, இந்தியாவில் வேறு எந்த மாநில அரசும் செய்ததில்லை' என தம்பட்டம் அடித்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.தி.மு.க.,வின் 'ஸ்பெஷாலிட்டி' என்ன தெரியுமோ?'சொன்னதையும் செய்தோம்; சொல்லாததையும் செய்தோம்' என, 'புருடா'க்களை அள்ளி விடுவது தான்!பெட்ரோல் விலையை 5 ரூபாய் குறைப்பதாக சொன்னவர்கள், 3 ரூபாய் மட்டுமே குறைத்தனர். டீசல் விலையை 3 ரூபாய் குறைப்பதாக சொன்ன
வாக்குறுதியை மறந்து விட்டனர்.ரேஷன் அரிசி கார்டு வைத்திருப்போருக்கு மட்டுமே, கொரோனா நிவாரணம் 4,000 ரூபாய் கொடுத்தனர். சர்க்கரை கார்டு வைத்திருப்போருக்கு, 'அல்வா' கொடுத்தனர்.'நீட் தேர்வை ரத்து செய்வோம்' என உறுதியாக சொன்னவர்கள், அதை செய்ய முடியாமல், மாணவர்களை தைரியமாக தேர்வு எழுதச் சொல்லி வேடிக்கை பார்த்தனர்.அரசு ஊழியர்களுக்கு ஜூலை முதல் தர வேண்டிய அகவிலைப்படி உயர்வை, அடுத்த ஜனவரியில் இருந்து கொடுப்பதாக 'ஜகா' வாங்கினர்.
'பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல் செய்வோம்' என்றனர்; இப்போது, அதை அமல் செய்தால் கஜானா காலியாகிவிடும் என்று, 'அந்தர் பல்டி' அடிக்கின்றனர்.காஸ் சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம்; இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கும் திட்டம் போன்றவற்றிற்கு, அதை அமல் செய்யும் தேதியை சொல்லவில்லை.தி.மு.க., முன்னாள் தலைவர் கருணாநிதிக்கு, 39 கோடி ரூபாய் செலவில் நினைவு மண்டபம் கட்ட வேண்டும்; மதுரையில் அவர் பெயரில் நுாலகம் அமைக்க வேண்டும்.இது தவிர இட ஒதுக்கீடு கேட்டு போராடி உயிர் நீத்தோருக்கு சிலைகள் வைக்க வேண்டும். சமூக நீதிக்காக போராடிய தியாகிகளுக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும். இது போன்ற முக்கியமான வேலைகள் செய்து முடிப்பதை தான், முதல்வர் ஸ்டாலின் பெரிய சாதனையாக நினைக்கிறார் போலும்.
கடுகு அளவு செய்து, அதை மலை அளவு போல 'படம்' காட்டுவதில், தி.மு.க.,வினருக்கு நிகர் வேறு யாருமில்லை!


எங்களுக்கு வலிமை இல்லை!ஆர்.எஸ்.மனோகரன், முடிச்சூர், செங்கல்பட்டு மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 2015 நவம்பர்- மற்றும் டிசம்பரில், வடகிழக்கு பருவ மழை கொட்டித் தீர்த்ததால் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள ஏரிகள் நிரம்பி வழிந்தன.செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீரை படிப்படியாக திறக்காமல் ஒட்டுமொத்தமாக ஒரே நாள் நள்ளிரவில் திறந்ததால் முடிச்சூர், மணிமங்கலம், வரதராஜபுரம், ராயப்பா நகர் போன்ற பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.
வீட்டிற்குள் 7 அடி அளவுக்கு நீர் புகுந்து, பெருத்த சேதத்தை விளைவித்தது. மக்கள் வெளியேற முடியாமல் தவித்தனர். ஹெலிகாப்டர் மூலமாகவும், படகுகள் மூலமாகவும் மக்கள் மீட்கப்பட்டனர்.அப்போது, ஐ.ஏ.எஸ்., அதிகாரியான அமுதா, வெள்ள பாதிப்பு நிவாரண பணி சிறப்பு அலுவலராக நியமிக்கப்பட்டார்.அவர், அடையாறு ஆற்றின் ஓரம் இருந்த ஆக்கிரமிப்பு வீடுகளையும், இடங்களையும் அகற்றி வெள்ள நீர் வடிய ஏற்பாடு செய்தார். அப்படியும், வெள்ள நீர் வடிய வாரக்கணக்கில் ஆயிற்று.
2015 போல் இல்லாவிட்டாலும், ஒவ்வோர் ஆண்டும், மழை நீர் இந்த நகர்களை சூழ்ந்து, வாரக்கணக்கில் வடியாமல் இருக்கும்.அப்பகுதி மக்கள், வரும் நவம்பர் மாத மழையை எதிர்நோக்கி, பீதியில் உள்ளனர். எனவே, இந்த பகுதிகளில் அடையாறு ஆற்றின் கரைகளை பலப்படுத்தி, துார் வார வேண்டும்.சென்னை மாநகராட்சி பகுதியில், வெள்ளத் தடுப்பு பணிகளை கண்காணிக்க ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் 15 பேர்
நியமிக்கப்பட்டு உள்ளனர்.அதே போல், செங்கல்பட்டு மாவட்டத்திற்கும் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை நியமித்து, வெள்ள நீர் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
கடந்த 2015 நிகழ்வு போன்ற பாதிப்பை மீண்டும் ஒரு முறை சந்திக்க, எங்களுக்கு வலிமை இல்லை.


தடுப்பூசி வழியே தலைவர்களை போற்றுவோம்!எஸ்.ரவிசங்கர், பெங்களூரிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கொரோனா தடுப்பூசி செலுத்துவதில், நம் நாட்டின் செயல்பாடு பாராட்டுக்கு உரியதே.பிரதமர் மோடி பிறந்த நாளின் போது, 2.16 கோடி மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. இது மிகப் பெரிய சாதனை. இதை எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்வதில், அரசியல் உள்நோக்கம் இருக்கிறது.அதே நேரம், இந்த கொரோனா தடுப்பூசி சாதனையை, 'தேசத் தந்தை' காந்தி மற்றும் முன்னாள் பிரதமர் லால்பகதுார் சாஸ்திரி ஆகியோரின் பிறந்த நாளான அக்., 2ம் தேதி துவங்கி இருந்தால், மிகவும் பொருத்தமாக இருக்கும் என்றே தோன்றுகிறது.பிரதமர் மோடி, தன் பிறந்த நாளில் இத்திட்டத்தை துவக்கியது தான், சிலரின் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. ஆனாலும், அன்றைய தினம் ஒரு நல்ல விஷயம் நடந்திருப்பது பாராட்டுக்குரியது.
தலைவர்களின் பிறந்த மற்றும் காலமான தினங்களில், சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்த வேண்டும்; இதன் வழியே தலைவர்களை நினைவுகூரலாம்.அக்., 2 மற்றும் 'இந்தியாவின் இரும்பு மனிதர்' சர்தார் வல்லபபாய் பட்டேல் பிறந்த நாளான அக்., 31ம் தேதிகளில், 2.30 கோடி என்று இலக்கு நிர்ணயம் செய்து, தடுப்பூசி செலுத்த வேண்டும்.இந்தியாவை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் சென்றதில், நம் நாட்டின் முதல் பிரதமர் நேருவிற்கு பெரும் பங்கு இருக்கிறது. அவரது பிறந்த நாளான நவ., 14ம் தேதி
குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது.அதை முன்னிறுத்தி, 12 முதல் 18 வயதிற்கு உட்பட்டோருக்கு தடுப்பூசி போடும் துவக்க விழா நடத்துவது பொருத்தமாக இருக்கும். மேலும் அன்றைய தினம், குழந்தைகளுக்கான தடுப்பூசியை அறிமுகப்படுத்துவது மிகவும் பொருத்தமாக இருக்கும்.இதே போன்ற சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்தினால், டிச., 31-க்குள் 100 கோடி தடுப்பூசி என்ற இலக்கை நாம் அடைந்து விடலாம்.

Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X