சிறப்பு பகுதிகள்

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

Added : அக் 04, 2021
Share
Advertisement
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேச்சு: நகைக்கடன் தள்ளுபடியில் முறைகேடு நடந்து உள்ளது என்று கூறி, தி.மு.க.,வினர் பட்டியலை எடுத்து, அவர்கள் பெற்றிருந்த கடன்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. ஆனால், எங்கள் ஆட்சியின் போது நகைக்கடன் தள்ளுபடிக்கு, 17 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கி, முறைப்படி தள்ளுபடி செய்தோம்.ஓ... அதற்காகத் தான், பட்டியல் தயாரித்தனரா... கேரளாவில் கம்யூ.,க்கள்


பேச்சு, பேட்டி, அறிக்கை

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேச்சு: நகைக்கடன் தள்ளுபடியில் முறைகேடு நடந்து உள்ளது என்று கூறி, தி.மு.க.,வினர் பட்டியலை எடுத்து, அவர்கள் பெற்றிருந்த கடன்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. ஆனால், எங்கள் ஆட்சியின் போது நகைக்கடன் தள்ளுபடிக்கு, 17 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கி, முறைப்படி தள்ளுபடி செய்தோம்.ஓ... அதற்காகத் தான், பட்டியல் தயாரித்தனரா... கேரளாவில் கம்யூ.,க்கள் புறம்போக்கு நிலங்களை எல்லாம் கட்சியினருக்கு பட்டா போட்டு கொடுப்பதை போல, இங்கே, தி.மு.க., இப்படி செய்கிறதா?


அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் பொன்னையன் பேட்டி:
மத்தியில், பா.ஜ., ஆளுவதால் தான், மாநிலத்தில் அந்த கட்சியுடன் இணக்கமாக இருக்கிறோம். இதனால், தமிழகத்திற்கு பல நல்ல திட்டங்களை கொண்டு வரலாம் என்பதற்காக, பா.ஜ., மீது மக்களுக்கு கடும் அதிருப்தி இருந்த போதிலும், பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணி தொடர்கிறது.இப்போதைய நிலையில், பா.ஜ.,வுடன் அ.தி.மு.க., கூட்டணியில் இருப்பது தான், அ.தி.மு.க.,வுக்கு பாதுகாப்பு. இல்லையேல், அமைச்சர்கள் பலரும் 'உள்ளே' தான் இருக்க வேண்டி இருக்கும்!


சமத்துவ மக்கள் கட்சித் தலைவர், நடிகர் சரத்குமார் அறிக்கை:
கூடங்குளத்தில் அணு மின் நிலையத்திற்குள்அணுக்கழிவு சேமிப்பு மையத்தை அமைக்க மத்திய அரசு முயற்சித்து வருகிறது. இது கண்டனத்திற்குரியது. மனிதர்கள் வாழத் தகுதியற்ற இடங்களில் தான் இத்தகைய சேமிப்பகங்கள் அமைக்கப்பட வேண்டும்.தமிழகத்தில் எத்தனை கட்சிகள் உள்ளன என்பதை பலரும் அறிந்து கொள்ள ஏதுவாக தான் இந்த விவகாரத்தை மத்திய அரசு கிளப்பியுள்ளதோ?


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொலிட்பீரோ உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் பேச்சு:
மதச்சார்பின்மையை சீர்குலைக்கும் பா.ஜ.,வை எதிர்கொள்ள நமக்கு ஒரு காந்தி தேவைப்படுகிறார். மதச்சார்பின்மை, கூட்டாட்சிக்கு எதிரான கட்சிகளை அரசியலை விட்டே நீக்க வேண்டும்.அப்படி செய்வதாக இருந்தால், போலி மதச்சார்பின்மை, கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக செயல்படும் கம்யூ.,க்கள் தான் நீக்கப்படுவர்!


தமிழக காங்., செய்தித் தொடர்பாளர் பீட்டர் அல்போன்ஸ் பேச்சு:
சமீப காலமாக சகிப்புத்தன்மையற்ற நிலை, வெறுப்பு அரசியல், வன்முறைகள் அதிகரித்து விட்டன. உரையாடவும், எதிர்தரப்பு கருத்துகளை கேட்கவும் யாரும் தயாராக இல்லை.உங்களைப் பற்றியும், நீங்கள் சார்ந்துள்ள கட்சி பற்றியும் அப்படியே புட்டு புட்டு வைத்து விட்டீர்களே!


பா.ஜ., தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் பேச்சு:
நீலகிரியில் வனத்துறையினர் மற்றும் மக்களுக்கு போக்கு காட்டும் புலியை சுட்டுக் கொல்லக் கூடாது. அதற்குப் பதில், அதை உயிருடன் பிடித்து வனத்தில் விட வேண்டும். தனி புலி தானே என சுட்டுக் கொல்ல நினைப்பது மனிதநேயமற்ற செயல்.நியாயம் தான். கூடுதலாக கூண்டுகள் அமைத்து, அந்தப் புலியை பிடிக்க வேண்டுமே தவிர, சுட்டுக் கொல்வதில் நியாயமில்லை!

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X