சிறப்பு பகுதிகள்

டீ கடை பெஞ்ச்

ஓட்டு வங்கிக்கு வேட்டு வைக்கும் காங்., - எம்.எல்.ஏ.,

Added : அக் 04, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
ஓட்டு வங்கிக்கு வேட்டு வைக்கும் காங்., - எம்.எல்.ஏ.,''எஸ்.பி.,க்கு தகவல் தெரிவிக்காம மறைச்சிடுதாவ வே...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் பெரியசாமி அண்ணாச்சி.''எந்த ஊர் விவகாரம் பா...'' எனக் கேட்டார் அன்வர்பாய்.''சேலம் மாவட்டத்துல, கல், மண், மணல் கடத்த எஸ்.பி., ஸ்ரீஅபினவ் தடை விதிச்சிருக்காரு... சங்ககிரி டி.எஸ்.பி., நல்லசிவம், எஸ்.பி., உத்தரவை கண்டிப்பா அமல்படுத்தி,
 ஓட்டு வங்கிக்கு வேட்டு வைக்கும் காங்., - எம்.எல்.ஏ.,


ஓட்டு வங்கிக்கு வேட்டு வைக்கும் காங்., - எம்.எல்.ஏ.,


''எஸ்.பி.,க்கு தகவல் தெரிவிக்காம மறைச்சிடுதாவ வே...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் பெரியசாமி அண்ணாச்சி.

''எந்த ஊர் விவகாரம் பா...'' எனக் கேட்டார் அன்வர்பாய்.

''சேலம் மாவட்டத்துல, கல், மண், மணல் கடத்த எஸ்.பி., ஸ்ரீஅபினவ் தடை விதிச்சிருக்காரு... சங்ககிரி டி.எஸ்.பி., நல்லசிவம், எஸ்.பி., உத்தரவை கண்டிப்பா அமல்படுத்தி, கடத்தலை தடுத்து
வச்சிருக்காரு வே...

''ஆனா, சமீபத்துல ஒரு வழக்கு விசாரணைக்காக, டி.எஸ்.பி., வேற மாவட்டத்துக்கு போயிருந்த நேரத்தை பயன்படுத்தி, உள்ளூர் போலீசார் சிலர், மணல் கடத்துறவங்களுக்கு
தகவல் குடுத்து, பல லட்சம் ரூபாய் மணலை ராவோட ராவா கடத்த உதவியா இருந்திருக்காவ வே...

''அதே மாதிரி, இடைப்பாடி பகுதியில போலீசார் உதவியோட மணல் கடத்துற கும்பல் பத்தி, தனிப்பிரிவு போலீசார், எஸ்.பி.,க்கு தகவல் தெரிவிக்கிறதே இல்லை... 'தனிப்பிரிவு போலீசார் மேலேயும் எஸ்.பி., நடவடிக்கை எடுத்தா தான், மணல் கடத்தலுக்கு விடிவு பிறக்கும்'னு நேர்மையான போலீசார் சொல்லுதாவ வே...'' என்றார் அண்ணாச்சி.உடனே, ''லோகோவை மாத்தியாவது கட்சியை வளர்க்க முடியுமான்னு பார்க்கிறாங்க பா...'' என்ற அன்வர்பாயே தொடர்ந்தார்...

''அகில இந்திய மகளிர் காங்கிரஸ் அமைப்பின் 38வது ஆண்டு துவக்க விழா, சமீபத்துல டில்லியில நடந்துச்சு...

''இதுல, பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து, பெரிய அகல் விளக்குல, மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள் எல்லாம், வீட்டுல இருந்து எண்ணெய் எடுத்து வந்து
ஊத்தியிருக்காங்க பா...

''அதோட, மகளிர் காங்கிரஸ் அமைப்பின் கொடியில வழக்கமா பயன்படுத்துற, 'நெற்றி பொட்டு கைவிரல்' லோகோவை மாத்திட்டு, காங்கிரஸ் கட்சியின் சின்னமான, 'கை'க்குள் நெற்றி பொட்டு
கைவிரலை வச்சு, புது லோகோவை உருவாக்கிஇருக்காங்க...

''மாநில வாரியா மகளிர் காங்கிரசை வளர்க்கணும்னு, புதுசா பொறுப்புக்கு வந்திருக்கிற அகில இந்திய மகளிர் காங்கிரஸ் தலைவர் நீட்டா டிசோசா அறிவுறுத்தி இருக்காங்க பா...''
என்றார் அன்வர்பாய்.

''கண்ணாடியை திருப்பினா ஆட்டோ ஓடும்னு ஒரு படத்துல காமெடி பண்ணுவாளோல்லியோ... அந்த மாதிரின்னா இருக்கு...'' எனச் சிரித்த குப்பண்ணா, ''இப்படி பேசினா ஒரு ஓட்டு கூட விழாதுங்கறா ஓய்...'' என, கடைசி
தகவலுக்கு வந்தார்.

''உள்ளாட்சி தேர்தல் சங்கதியாங்க...'' என்றார் அந்தோணிசாமி.

''ஆமாம்... காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்துார் ஒன்றிய பகுதிகள்ல தேர்தல் பிரசாரம் சூடு பிடிச்சிருக்கு... தி.மு.க., வையும், கூட்டணி
கட்சிக்காராளையும் ஆதரிச்சு, ஸ்ரீபெரும்புதுார் காங்கிரஸ் எம்.எல்.ஏ., செல்வப் பெருந்தகை பிரசாரம் செஞ்சுண்டு இருக்கார் ஓய்...

''ஆளுங்கட்சியின் சாதனைகளை சொல்லி ஓட்டு கேட்காம, எதிர் தரப்புல நிக்கற வேட்பாளர்களை மிரட்டற விதமா பேசறார்...

''ஒரத்துார் ஊராட்சியில பிரசாரம் செஞ்ச எம்.எல்.ஏ.,வும், தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் ஒன்றிய தலைவர் மனோகரனும், ஊராட்சியின் முன்னாள் தலைவரை மிரட்டற தொனியில
பேசியிருக்கா ஓய்...''இதைப் பார்க்கற மக்கள், 'இப்பவே இப்படி மிரட்டறாளே... ஜெயிச்சு வந்துட்டா, நம்மையும் இப்படித்தானே மிரட்டுவா'ன்னு பேசிண்டு இருக்கா ஓய்...'' என்றார் குப்பண்ணா.
பேச்சு முடிய, பெரியவர்கள் புறப்பட்டனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
05-அக்-202115:23:08 IST Report Abuse
D.Ambujavalli காங்கிரஸ் கூட லோகோ வை மாற்றிப் பார்த்தாவது கூட நாலு இடம் கிடைக்குமா என்று பார்க்கலாம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X