பொது செய்தி

தமிழ்நாடு

இதே நாளில் அன்று

Added : அக் 04, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
அக்., 5, 1934சென்னை மயிலாப்பூரில், 1934 அக்., 5ல் பிறந்தவர், சோ ராமசாமி. உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றினார். 'தேன்மொழியாள்' என்ற நாடகத்தில், 'சோ' என்ற கதாபாத்திரத்தில் நடித்தார்; அதுவே, அவரது பெயராக நிலைத்து விட்டது.'முகமது பின் துக்ளக்' உட்பட, 20க்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதி, இயக்கி, நடித்துள்ளார். 200 படங்களில் நடித்துள்ளார். யாருக்கும் வெட்கமில்லை,
 இதே நாளில் அன்று


அக்., 5, 1934

சென்னை மயிலாப்பூரில், 1934 அக்., 5ல் பிறந்தவர், சோ ராமசாமி. உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றினார். 'தேன்மொழியாள்' என்ற நாடகத்தில், 'சோ' என்ற கதாபாத்திரத்தில் நடித்தார்; அதுவே, அவரது பெயராக நிலைத்து விட்டது.'முகமது பின் துக்ளக்' உட்பட, 20க்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதி, இயக்கி, நடித்துள்ளார். 200 படங்களில் நடித்துள்ளார். யாருக்கும் வெட்கமில்லை, உண்மையே உன் விலை என்ன உள்ளிட்ட, சில படங்களை இயக்கியுள்ளார். 'டிவி' நாடகங்களுக்கு கதை எழுதியும், இயக்கியும், நடித்தும் உள்ளார்.கடந்த 1970ல், 'துக்ளக்' என்ற வார இதழை துவக்கினார். அரசியல்வாதிகளை, தன் நையாண்டி விமர்சனத்தால் துளைத்தெடுத்தார். 'இந்து மகா சமுத்திரம்' உட்பட, ஏராளமான புத்தகங்களும் எழுதியுள்ளார். 1999ல் ராஜ்யசபா எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2016 டிச., 7ல், தன் 82வது வயதில் காலமானார்.அரசியல் விமர்சகர், சோ பிறந்த தினம் இன்று!

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
08-அக்-202105:29:15 IST Report Abuse
meenakshisundaram சோவுக்கு மயிலாப்பூரில் சிலை வைக்க ஸ்டாலின் முன் வரவேண்டும் .ஈவேரா சிலை செலவில் கொஞ்சம் குரைத்துக்கொண்டு முன் வருமா திமுக ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X