ராணுவத்துறையில் தனியாரின் பங்கு அவசியம்: ராஜ்நாத் சிங்

Updated : அக் 04, 2021 | Added : அக் 04, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
டில்லி: ராணுவத்துறையில் தனியாரின் பங்கு அவசியம் என்றும் தொழில்நுட்பத்தை இருவேறு கிளைகளாகப் பிரித்து இரண்டையும் வளர்ச்சி காண இந்திய அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். ஆய்வு மற்றும் மேம்பாட்டுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று கூறினார். உலக அளவில் ராணுவ பயன்பாட்டு சாதனங்களுக்கு தேவை

டில்லி: ராணுவத்துறையில் தனியாரின் பங்கு அவசியம் என்றும் தொழில்நுட்பத்தை இருவேறு கிளைகளாகப் பிரித்து இரண்டையும் வளர்ச்சி காண இந்திய அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.



latest tamil news




ஆய்வு மற்றும் மேம்பாட்டுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று கூறினார். உலக அளவில் ராணுவ பயன்பாட்டு சாதனங்களுக்கு தேவை அதிகரித்து வருவதாகவும் சர்வதேச பாதுகாப்பு, எல்லைப் பிரச்னை ஆகியவற்றைத் தவிர்க்க இது மிகவும் முக்கியம் என்றும் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.


latest tamil news




டிஆர்டிஓ கூட்டத்தில் இதுகுறித்துப் பேசிய ராஜ்நாத் சிங், ராணுவ அதிகாரம், வர்த்தகம், தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் உலக அளவில் மாற்றம் ஏற்பட்டு வருவதாகவும் ராணுவத்தை நவீனமயமாக்க பல நாடுகள் முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும் ராணுவ வளர்ச்சிக்கு தனியார் துறையின் பங்கு அவசியம் என்று தெரிவித்த அவர், இது ராணுவ பலத்தை அதிகரிக்க உதவும் என்று கூறினார். குவாண்டம் கம்ப்யூட்டிங், நேனோ டெக்னாலஜி, செயற்கை நுண்ணறிவு, ரோபோ தொழில்நுட்பம் உள்ளிட்டவற்றை எதிர்காலத்தில் ராணுவத்தில் சேர்க்க வேண்டும் என்றும் மேலும் வெளிநாடுகளுக்கு இந்த தொழில்நுட்பங்களை ஏற்றுமதி செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mazda - Chennai,சிங்கப்பூர்
05-அக்-202109:49:20 IST Report Abuse
Mazda என்னய்யா இது, நம்ம கம்பெனி ஆட்கள் எல்லாம் மொத்தமா லீவு போட்டுட்டுட்டாங்க. ஒருத்தரயம் காணோம் .
Rate this:
Cancel
J. G. Muthuraj - bangalore,இந்தியா
05-அக்-202107:53:52 IST Report Abuse
J. G. Muthuraj ராணுவத்தில் பயன்படுத்தப்படும் தொழில் நுட்ப கருவிகளை அதின் செயலாக்கங்களை தனியார்வசம் கொடுத்தால், நமது ராணுவ ரகசியங்கள் பிறருக்கு விற்கப்படுமே, சார்.....
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
04-அக்-202123:07:23 IST Report Abuse
தமிழவேல் பேசாம ராணுவத்தையும் தனியார்கிட்டயே குடுத்துடலாம். அப்புறமா, ஒரு மந்திரியும் தேவைப்படாது. அதுக்கு பட்ஜெட்டும் போட வேண்டியதில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X