சிறப்பு பகுதிகள்

சொல்கிறார்கள்

பத்திரப்படுத்துவது சுலபம்; இடத்தையும் அடைக்காது!

Added : அக் 04, 2021
Share
Advertisement
கொலு பொம்மைகளை செய்து வரும் சென்னையைச் சேர்ந்த கைவினைக் கலைஞர் ஆண்டாள்: என் சொந்த ஊர் திருநெல்வேலி. சென்னையில் 'செட்டில்' ஆகி ஏழு ஆண்டுகள் ஆகிறது. திருநெல்வேலியில் இருந்து சென்னை வந்தபோது, மண் பொம்மைகள் அனைத்தையும் எடுத்து வரமுடியவில்லை. சென்னை வீட்டில் அதற்கு இடமும் இல்லை.மண் பொம்மைகளுக்கு மாற்றுவழியை யோசித்தபோது, துணி பொம்மை யோசனை வந்தது. என் தோழிகள் மற்றும்
சொல்கிறார்கள்

கொலு பொம்மைகளை செய்து வரும் சென்னையைச் சேர்ந்த கைவினைக் கலைஞர் ஆண்டாள்: என் சொந்த ஊர் திருநெல்வேலி. சென்னையில் 'செட்டில்' ஆகி ஏழு ஆண்டுகள் ஆகிறது. திருநெல்வேலியில் இருந்து சென்னை வந்தபோது, மண் பொம்மைகள் அனைத்தையும் எடுத்து வரமுடியவில்லை. சென்னை வீட்டில் அதற்கு இடமும் இல்லை.மண் பொம்மைகளுக்கு மாற்றுவழியை யோசித்தபோது, துணி பொம்மை யோசனை வந்தது. என் தோழிகள் மற்றும் 'யு டியூப்' பார்த்து பொம்மை தயாரிப்புக்கான அடிப்படை விஷயங்களைக் கற்றேன்.ஆரம்பத்தில் கடைகளில் விற்கும் 'பார்பி' பொம்மை உட்பட 'வெஸ்டர்ன்' பொம்மைகளை வாங்கி, அவற்றுக்கு தலை அலங்காரம், பட்டுத்துணிகளால் உடை அலங்காரம், கம்மல், நெத்திச்சுட்டி, வளையல் எல்லாம் அணிவித்து, தமிழ் கலாசாரத்துக்கு ஏற்றபடி மாற்றினேன். அந்தப் பொம்மைகளை போட்டோ எடுத்து, என் சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டேன். நான் செய்த பொம்மைகளை வைத்து, சென்னையில் கொலு வைத்தேன்.பிறகு, துணி பொம்மைகள் செய்ய ஆரம்பித்தேன். பிளவுஸ் துணிகளை வாங்கி, அதில் பொம்மைக்குத் தேவையான கைகள், கால்கள், உடல் அளவுகளை வெட்டியெடுத்து, கட்டுக்கம்பி வைத்து தைத்தேன். பொம்மைக்குத் தேவையான முகம், கேன்வாஸ் துணிகளில் செய்யப்பட்டு கடைகளில் கிடைக்கிறது. அதை வாங்கி, பொம்மைக்காக நாம் தைத்து வைத்துள்ள கை கால், உடம்போடு இணைக்க வேண்டும். அப்புறம் ஆடை அலங்காரம் செய்ய வேண்டும்.கல் பதித்த செயின்களை பயன்படுத்தி நகைகளும், கறுப்பு நுாலால் பொம்மைகளுக்கு ஜடை அலங்காரமும் செய்துவிட்டால் அற்புதமாக தயாராகி விடும். இந்தப் பொம்மைகளை 12, 18, 24 மற்றும் 36 அங்குல அளவுகளில் நம் விருப்பத்துக்கேற்ப எந்த உயரத்துக்கும் செய்ய முடியும்.துணி பொம்மைகளை பத்திரப்படுத்துவது சுலபம்; இடத்தையும் அடைக்காது. அடுத்தாண்டு கொலுவுக்கு அந்தப் பொம்மைகளுக்கு துணிகளை மட்டும் மாற்றினாலே புதிது போல ஆகிவிடும்.என் வீட்டு கொலு பொம்மைகளைப் பார்த்து, அதே மாதிரி வேண்டும் என கேட்பவர்களுக்கு தயார் செய்து கொடுக்கிறேன். 'ஆன்லைன்' மூலமாகவும் பொம்மைகள் விற்பனை செய்கிறேன். திருமண பொம்மைகள், 'ரிட்டன் கிப்டு'களுக்கான 'ஆர்டர்'களும் வரும். என் முதலீடு வெறும் 100 ரூபாய் தான். ஆனால், இந்த பிசினசால் மாதம் 30 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கிறேன்.எங்கள் வீட்டு கொலுவில், ஒவ்வொரு பொம்மையும் என் கைப்பட பார்த்துப் பார்த்து செய்வேன். கொலு பார்க்க வருபவர்கள் பொம்மைகளைப் பாராட்டாமல் சென்றதே இல்லை.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X