பொது செய்தி

இந்தியா

வழக்கு தொடர்ந்த பின் போராட்டம் ஏன்? விவசாயிகளுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி!

Updated : அக் 06, 2021 | Added : அக் 04, 2021 | கருத்துகள் (13+ 37)
Share
Advertisement
புதுடில்லி,: 'வேளாண் சட்டங்களை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, சட்டத்தை செயல்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ள நிலையிலும், விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவது ஏன்' என, உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மத்திய அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து, டில்லி எல்லையில் பஞ்சாப், ஹரியானா உட்பட சில மாநில விவசாயிகள் போராட்டத்தில்
வழக்கு, போராட்டம் , விவசாயிகள், உச்ச நீதிமன்றம்

புதுடில்லி,: 'வேளாண் சட்டங்களை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, சட்டத்தை செயல்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ள நிலையிலும், விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவது ஏன்' என, உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

மத்திய அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து, டில்லி எல்லையில் பஞ்சாப், ஹரியானா உட்பட சில மாநில விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே கிசான் மகாபஞ்சாயத்து என்ற விவசாய அமைப்பு, டில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்த அனுமதி கேட்டு, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் மற்றும் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிட்டதாவது:வேளாண் சட்டங்களை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அரசியல் சாசனத்தின் உயர் அமைப்பில் வழக்கு தொடர்ந்த பிறகும் போராட்டங்களை நடத்தி வருவது ஏற்புடையதல்ல.
மேலும் இந்த போராட்டத்தின்போது ஏற்படும் பொது சொத்துக்கள் இழப்புக்கு யாரும் பொறுப்பேற்பதில்லை. உத்தர பிரதேசத்தின் லக்கிம்பூரில் நடந்த போராட்டத்தின்போது வன்முறை வெடித்து, எட்டு உயிர்கள் பலியாகி உள்ளன. இதற்கு யார் பொறுப்பேற்பது.இவ்வாறு அவர்கள் வாதிட்டனர்.
இதை விசாரித்த நீதிபதிகள், ஏ.எம்.கன்வில்கர், சி.டி.ரவிகுமார் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டதாவது: விவசாய சட்டங்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த சட்டங்களை செயல்படுத்துவதற்கு தடையும் விதிக்கப்பட்டுள்ளது. பின் யாரை எதிர்த்து போராட்டம் நடத்துகின்றனர்.போராட்டம் நடத்துவதற்கு அனுமதி கேட்கின்றனர். ஆனால், அதனால் பொது சொத்துக்களுக்கு ஏற்படும் இழப்புக்கு யாரும் பொறுப்பு ஏற்பதில்லை.நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பின், போராட்டம் நடத்த விவசாயிகளுக்கு உரிமை உள்ளதா என்பது குறித்து, 21ம் தேதி விசாரிக்கப்படும்.இவ்வாறு அமர்வு உத்தரவிட்டது.


உச்ச நீதிமன்றம் 'நோட்டீஸ்'

டில்லி எல்லையில் சாலைகளை மறித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதை எதிர்த்து, டில்லி எல்பை பகுதியில் குடியிருப்போர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளையும் சேர்க்க வேண்டும் என, ஹரியானா அரசு கூறியிருந்தது.இதையடுத்து விவசாய சங்கங்களைச் சேர்ந்த 43 தலைவர்களுக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (13+ 37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
elakkumanan - Naifaru,மாலத்தீவு
05-அக்-202121:08:31 IST Report Abuse
elakkumanan காசு கொடுத்த முதலாளி சொல்வதை காசு வாங்கிய வேலையாள் கேட்பதுதான் உலகம் முழுவதும் உள்ள நடைமுறை... இதுகூட தெரியாத உச்சநீதிமன்றமா ? ஐயோ பாவம்.............
Rate this:
Cancel
Anand - chennai,இந்தியா
05-அக்-202112:21:39 IST Report Abuse
Anand இவனுங்க விவசாயிகளே அல்ல, கூலிக்கு மாரடிக்கும் ரவுடி கும்பல்......
Rate this:
Cancel
natarajan s - chennai,இந்தியா
05-அக்-202111:28:05 IST Report Abuse
natarajan s இந்த விவசாயிகள் போராட்டம் செய்வது இத்தனை மாடம் கழித்துதான் இந்த நீதி மன்றத்திற்கு தெரிகிறதா? வழக்கு admission கொடுத்தவுடனேயே, போராட்டம் விலகினால்தான் மேற்கொண்டு விசாரணை என்று உத்தரவு போட்டு இருந்தால் அவர்கள் வழிக்கு வந்து இருப்பார்கள். இவ்வளவு நாட்களாக நெடுஞ்சாலை மறியல் தெரியவில்லையா? இப்போதுதான் மக்களுக்கு தொந்தரவு என்று தெரிய வந்ததா? நமது நாட்டில் குற்றம் செய்வோர் பயமில்லாமல் இருக்க நமது நீதி மன்ற நடவடிக்கையும் ஒரு காரணம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X