போதை விருந்து : சொகுசு கப்பலில் சோதனை

Updated : அக் 06, 2021 | Added : அக் 04, 2021 | கருத்துகள் (10+ 20)
Share
Advertisement
மும்பை :பாலிவுட் நடிகர் ஷாரூக்கானின் மகன் ஆர்யன் கான், போதை விருந்து நடத்தி கைதான சொகுசு கப்பல், கோவாவில் இருந்து நேற்று மும்பை திரும்பியது.போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கப்பல் முழுதும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.மஹாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது.இங்குள்ள மும்பை கடற்கரையில் இருந்து
போதை விருந்து , சொகுசு கப்பல் ,சோதனை

மும்பை :பாலிவுட் நடிகர் ஷாரூக்கானின் மகன் ஆர்யன் கான், போதை விருந்து நடத்தி கைதான சொகுசு கப்பல், கோவாவில் இருந்து நேற்று மும்பை திரும்பியது.போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கப்பல் முழுதும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

மஹாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது.இங்குள்ள மும்பை கடற்கரையில் இருந்து கோவாவுக்கு புறப்பட்டு சென்ற, 'கார்டிலியா' சொகுசு கப்பலில், போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார், 2ம் தேதி நள்ளிரவு சோதனை நடத்தினர்.அப்போது கப்பலில் பயணித்துக் கொண்டிருந்த பாலிவுட் நடிகர் ஷாரூக் கானின் மகன் ஆர்யன் கான் மற்றும் அவரது நண்பர்கள் ஏழு பேரிடம், 'கொகைன், சரஸ், எக்ஸ்டசி' உள்ளிட்ட விலை உயர்ந்த போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டன.இதையடுத்து, ஆர்யன் கான் உட்பட எட்டு பேரையும் போலீசார் கைது செய்தனர். இவர்கள் எட்டு பேருக்கும் நேற்று மாலை வரை போலீஸ் காவல் வழங்கி சிறப்பு விடுமுறை நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் நேற்று நீதிமன்றத்தில் இவர்கள் ஆஜர் படுத்தப்பட்டனர். அப்போது ஆர்யன் கான் உட்பட மூன்று பேரை மட்டும், போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கட்டுப்பாட்டில் வைத்து, 7ம் தேதி வரை விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் கார்டிலியா சொகுசு கப்பலில் 1,800 பயணியர் கோவாவுக்கு பயணித்துக் கொண்டிருந்தனர். எனவே, ஆர்யன் கான் உள்ளிட்ட எட்டு பேரை மட்டும் கைது செய்த போலீசார், சொகுசு கப்பல் புறப்பட்டு செல்ல அனுமதி அளித்தனர்.திட்டமிட்டபடி அந்த சொகுசு கப்பல் கோவா சென்று, நேற்று காலை மீண்டும் மும்பை திரும்பியது.

அந்த கப்பலில் போதை பொருள் தடுப்பு பிரிவு மண்டல இயக்குனர் சமீர் வான்கடே தலைமையிலான போலீசார் தீவிர சோதனை நடத்தினர். கார்டிலியா சொகுசு கப்பலை இயக்கும், 'வாட்டர்வேல் லீஷர்' நிறுவனம் மற்றும் கப்பலை வாடகைக்கு எடுத்து கோவா பயணத்துக்கு ஏற்பாடு செய்த டில்லியை சேர்ந்த, 'நமஸ் கிரே' என்ற நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவன அதிகாரிகளிடம் விசாரணை நடத்த, விரைவில் 'சம்மன்' அனுப்பப்பட உள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (10+ 20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெயந்தன் - Chennai,இந்தியா
05-அக்-202111:37:16 IST Report Abuse
ஜெயந்தன் அதானி துறைமுகத்தில் வந்த பல ஆயிரக்கணக்கான கோடி போதை பொருள் பற்றி யாரும் மூச்சு விடவில்லையே ..அது ஏன்.. ஒருவேளை அதில் சினிமா நடிகர்கள் இல்லாமல் அரசியல்வாதிகள் தொடர்பு இருப்பதாலா??
Rate this:
Cancel
ஜெயந்தன் - Chennai,இந்தியா
05-அக்-202111:34:50 IST Report Abuse
ஜெயந்தன் யாராக இருந்தாலும் போதை பொருள் கடத்தினால்...மொத்த குடும்பத்திற்கும் தண்டனை தர வேண்டும்...குறிப்பாக தாய் தந்தைக்கு....
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
05-அக்-202111:01:51 IST Report Abuse
vbs manian பாலிவுட் முழுதும் போதையில் மிதக்கிறது. அறியா பையன் அகப்பட்டு விட்டான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X